சென்னை: இந்தியாவின் அதி விரைவு ரயிலாக வர்ணிக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் கோச் வசதி வரவுள்ளது. ஸ்லீப்பர் கோச்சுடன் கூடிய ரயிலை சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடவுள்ளது.
இந்தியாவின் அதி வேக ரயிலாக அறியப்படுவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது. குறுகிய தூரத்தில் இந்த ரயில்கள் முக்கிய நகரங்களை சென்றடைவதால் மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.
வந்தே பாரத் ரயில்களில் தற்போது அமர்ந்து செல்லும் வசதி மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தற்போது வந்தே பாரத் ரயில்களிலும் ஸ்லீப்பர் கோச்களை இணைக்கவுள்ளனர். இந்த புதிய படுக்கை வசதியுடன் கூடிய ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கி வருகிறது.
முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று ஐசிஎப் பொது மேலாளர் பிஜி மல்லையா கூறியுள்ளார். ஐசிஎப்பில் வந்தே பாரத் மெட்ரோ ரயிலும் கூட தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயிலில் 12 பெட்டிகள் இருக்கும். குறுகிய தூரத்திலான நகரங்களுக்கு இடையே இந்த மெட்ரோ ரயில் இயக்கப்படும். முதல் ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தயாராகி விடுமாம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}