Dreams... என்னாது உங்க கனவுல அடிக்கடி முருகன் வர்றாரா.. அப்படின்னா என்ன நடக்கும்னு தெரியுமா ?

Sep 26, 2024,10:00 AM IST

சென்னை :   கனவுகள் என்பது நம்முடைய ஆழ்மனதின் வெளிப்பாடு என அறிவியல் சொல்கிறது. தினமும் தூக்கத்தின் போது ஒரு மனிதன் 40 க்கும் மேற்பட்ட கனவுகள் காண்பதாகவும், இவற்றில் 10 சதவீதம் மட்டுமே கண் விழித்த பிறகும் நினைவில் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் நாம் காணும் கனவுகளுக்கு ஒவ்வொரு விதமான அர்த்தம், பலன்கள் உள்ளதாக சொப்பண சாஸ்திரம் சொல்கிறது. அதே சமயம் நாம் காணும் கனவுகள் அனைத்திற்கும் பலன்கள் இருப்பது கிடையாது. 


நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது தான் பிரபஞ்சமும், நம்முடைய முன்னோர்களும், தெய்வீக சக்திகளும் நம்முடன் கனவுகள் வழியாக தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாக சொல்லப்படுகிறது. நிஜத்தில் பார்த்ததை போன்ற உணர்வை ஏற்படும் கனவுகள் மற்றும் கண் விழித்த பிறகும் தெளிவாக நினைவில் இருக்கும் கனவுகள் ஆகியவற்றிற்கு மட்டுமே பலன்கள் உண்டு என சொல்லப்படுகிறது. இவைகள் நம்முடைய நிகழ்காலத்துடனும், எதிர்காலத்துடனும் தொடர்புடையதாகவோ அல்லது நமக்கு வரப் போகும் நன்மை, தீமைகளை முன்கூட்டியே உணர்த்துவதாகவோ அல்லது எச்சரிப்பதாகவோ இருக்கலாம்.




இப்படி வரும் கனவுகளில் ஆன்மிகம் சார்ந்த பெரும்பாலான கனவுகள் நமக்கு நல்லது நடக்க போகிறது என்பதை குறிப்பதாகவே அர்த்தம். உங்களுடைய கனவில் முருகப் பெருமான் வருவது போல் கனவு வந்தால் அது மிக மிக நல்ல அறிகுறியாகும். இது போன்ற கனவுகள் அனைவருக்கும் வருவது கிடையாது. தெய்வங்கள் கனவில் வருவது தெய்வ அருள் இருப்பவர்களுக்கு மட்டுமே நடக்கும். அப்படி முருகனை நீங்கள் கனவில் கண்டால், உங்கள் வாழ்க்கையில் இனி முன்னேற்றம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.


முருகப் பெருமானை குழந்தை வடிவமாக கனவில் கண்டால், நீங்கள் குழந்தை வரத்திற்காக ஏங்கி காத்திருப்பவர்களாக இருந்தால், விரைவில் நானே குழந்தையாக வந்து பிறப்பேன் என முருகன் கூறுவதாக அர்த்தம். அல்லது உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள், துன்பங்கள் முருகப் பெருமானின் அருளால் தீரப் போகிறது என்று அர்த்தம். முருகப் பெருமான் கையில் வேலுடன் காட்சி தருவதாக கனவு கண்டால், "உனக்கு துணையாக நான் இருக்கிறேன். யாம் இருக்க பயமேன்" என முருகன் சொல்லுவதாக அர்த்தம்.


மலை மீது இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது போல் கனவு கண்டால், இனி உங்களுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைத்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல போகிறீர்கள் என்று அர்த்தம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்