அணுகுண்டு யுத்தம் வெடித்தால்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து.. பாதுகாப்பான நாடுகள்!

Feb 11, 2023,04:11 PM IST
டெல்லி: அணு குண்டுகள் வெடித்து உலகில் அணு யுத்தம் நேரிட்டு பூமி மொத்தமும் அழிந்தாலும் கூட, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் மூலம் மனித இனம் தழைத்தோங்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.



இந்த இரு நாடுகளும் அணுப் பேரழிவைத் தாங்கும் வல்லமை கொண்டவையாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Risk Analysis என்ற இதழில் இதுதொடர்பாக விஞ்ஞானிகளின் கட்டுரை ஒன்று இடம் பெற்றுள்ளது. 

இந்த ஆய்வில், உலகில் அணு யுத்தம் ஏற்பட்டு மனித இனத்திற்குப் பெரும் மிரட்டல் வந்தாலும் கூட உலகில் உள்ள  சில தீவு நாடுகளில் மனித இனம் தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளது. அத்தகையாக நாடுகளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐஸ்லாந்து, சாலமன் தீவுகள், வனாட்டு ஆகியவை உள்ளன.

இந்த நாடுகளில் உள்ள மக்கள் அணு யுத்தப் பேரழிவிலிருந்து தப்பும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உலகம் முழுவதும் மனித இனத்தின் வாழ்வுக்கு பெரும் மிரட்டல் ஏற்பட்டாலும் கூட இந்த தீவுகளில் மக்கள் தப்ப வாய்ப்புகள் அதிகம். உலகில் அணு யுத்தம் வெடித்தால் எந்த நாடுகள் அதிலிருந்து  தப்பும் என்பதை ஆராய்வதற்காக 38 தீவு நாடுகளில் ஆய்வுகள் நடந்தன.  13 காரணிகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடந்தது. அதில் மேற்கண்ட தீவு நாடுகள்தான் மிகவும் பாதுகாப்பானவை  என்று தெரிய வந்ததாம்.

இதில் ஆஸ்திரேலியாதான் மிகவும் பாதுகாப்பான நாடாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு உணவு உற்பத்தி மிகச் சிறப்பாக உள்ளது. எனவே உணவு சப்ளை பாதிக்கப்பட வாய்ப்பே இல்லை. பல கோடி மக்களுக்கு கொடுக்கக் கூடிய அளவுக்கு இங்கு உணவு உற்பத்தி அபரிமிதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படமைக் கட்டமைப்பும், மின்சக்தியும், சுகாதார சேவையும், பாதுகாப்பும் மிகச் சிறப்பாக உள்ள நாடாகாவும் ஆஸ்திரேலியா திகழ்கிறது.

அதேசமயம், ஆஸ்திரேலியாவுக்குப் பாதகமாக இரண்டு விஷயங்கள் உள்ளன. அந்த நாடு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் வைத்துள்ள நெருக்கமான நட்புதான் அது. அந்த நட்பு காரணமாக, இந்த இரு நாடுகளின் எதிரிகளால் ஆஸ்திரேலியாவும் குறி வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

மறுபக்கம் நியூசிலாந்து நாடு. இது  நீண்ட காலமாகவே அணு ஆயுதங்களுக்கு எதிராக உள்ள நாடு. மேலும் இந்த நாட்டுக்கு எதிரிகள் என்று பெரும்பாலும் கிடையாது. உணவு உற்பத்தி உள்ளிட்ட பலவற்றிலும் தன்னிறைவு பெற்ற நாடு. எனவே பெரும் அணு யுத்தம் வெடித்தாலும் நியூசிலாந்து சமாளித்து விடும் என்று சொல்கிறார்கள்.

உலகப் பெரும் அணு யுத்தம் வெடித்தால்  அமெரிக்கா, சீனா, ரஷ்யாவில் உணவு உற்பத்தியானது 97 சதவீதம் அளவுக்கு பாதிப்பை சந்திக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்