சென்னை: தன்னைப் பற்றி நாலாபுறமும் சுற்றிக் கொண்டிருந்த விமர்சனங்கள், வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இசைஞானி இளையராஜா சத்தமே இல்லாமல் ஒரு அதிரடியான வேலையைச் செய்து முடித்துள்ளார். அதாவது ஒரு சிம்பொனியை எழுதி முடித்திருக்கிறாராம் இளையராஜா. இதை அவரே சந்தோஷமாக அறிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா குறித்து சமீப நாட்களில் காரசாரமான விவாதங்கள் ஓடிக் கொண்டுள்ளன. சமீப காலமாக என்றில்லை. சில வருடங்களாகவே அவரைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள், விவாதங்கள் ஓடிக் கொண்டுதான் உள்ளன. ஆனால் எதையுமே அவர் கண்டு கொள்வதில்லை. அவரது வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவைப் போட்டுள்ளார் இளையராஜா. அதில் அவர் கூறியுள்ள செய்தியால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.. காரணம், மாபெரும் இசை விருந்து குறித்த தகவல்தான் அது. இளையராஜாவின் பேச்சிலிருந்து...

எல்லோருக்கும் வணக்கம். தினமும கேள்விப்படுகிறேன். என்னைப் பற்றி இது மாதிரி ஏராளமான வீடியோக்கள் வருகிறது என்று. எனக்கு வேண்டியவர்கள் வந்து சொல்வாங்க. நான் அதில் கவனம் செலுத்துவதில்லை. ஏன்னா மத்தவங்களைக் கவனிப்பது எனது வே்லை அல்ல. எனது வேலையைக் கவனிப்பதுதான் எனது வேலை. எனது வழியில் நான் கிளியராக, சுத்தமாக போய்க் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் எல்லாம் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடிச்சுட்டேன். பிலிம் சாங்ஸ் கொடுத்துக் கொண்டும், சில இடங்களுக்கும், விழாக்களுக்கும் சென்று தலையைக் காட்டி விட்டு இதெல்லாம் நடந்து கொண்டிருந்தாலும் ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக முடித்திருக்கிறேன். 4 மூவ்மென்ட்ஸ்களில், அதாவது சிம்பொனி என்றால் எப்படி இருக்குமோ அப்படி.. எழுதி முடித்து விட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை, எனக்கு சந்தோஷமான செய்தியை சொல்லிக் கொள்கிறேன்.
பிலிம் மிசியூசிக் வேற, பேக்கிரவுண்ட் மியூசிக் வேற.. எல்லாம் அதில் ரிப்ளக்ட் ஆச்சுன்னா அது சிம்பொனி கிடையாது. ப்யூர் சிம்பொனியை எழுதி முடித்திருக்கிறேன். உங்களுக்கு, ரசிகர்களுக்கு, என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகமான இந்த செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் இளையராஜா.
இளையராஜாவின் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இளையராஜா சிம்பொனியை எழுதுவது இது முதல் முறையல்ல. முன்பே கூட லண்டனில் ஒரு சிம்பொனி இசையை அவர் அமைத்தார். ஆனால் அது வெளிவரவில்லை. இந்த நிலையில் முழுக்க முழுக்க புது சிம்பொனியை அவர் எழுதியுள்ளதாக அறிவித்துள்ளார். இது இசை வடிவம் பெற்று வெளி வரும்போது மாபெரும் இசை விருந்தாக அது அமையும், இளையராஜாவின் இசை ஞானம் மேலும் புகழ் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
தொடர்ந்து மக்களை புலம்ப வைத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
{{comments.comment}}