இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

Oct 23, 2025,01:00 PM IST

- இரா.பிருந்துமாலினி


அந்த அரசு பள்ளியின் வாசலில் காலை மற்றும் மாலை வேலைகளில் அந்தப் பாட்டியைச் சுற்றி ஒரு கூட்டம் நிற்கும். 


கையில் புத்தகப் பையைப் பிடித்துக் கொண்டு மாணவர்களும் மாணவிகளும் "பாட்டி எனக்கு! பாட்டி எனக்கு !"என ஒரு ரூபாயை கொடுத்து  இலந்தைப் பழத்தை வாங்கிக் கொண்டிருப்பார்கள். பக்கத்தில் அமர்ந்து மாங்காய் விற்றுக் கொண்டிருக்கும் அம்மாவோ" ம்ம்... ஒரு ரூபாய்க்கு கேட்டால் அஞ்சு ரூபாய்க்கு இலந்தைப்பழம் கொடுக்கிற.... உன்கிட்ட தான் எல்லாரும் வாங்குறாங்க... எனக்கு தான் வியாபாரமே இல்லையே.. "என முனகுவாள்.


பாட்டி இவற்றையெல்லாம் கண்டுகொள்ள மாட்டாள். இலந்தைப் பழத்தைக் கூறுகட்டி விற்றுக் கொண்டிருப்பாள்.


அவள் எவ்வளவுதான் வியாபாரத்தில் மும்முறமாக இருந்தாலும் அவளிடம் இருக்கும் ஒரு பையை மட்டும் கீழே வைக்கவே மாட்டாள். அப்படியே வைத்தாலும் தன் காலுக்கு அடியில் நகர்த்தி வைத்துக் கொள்வாள். 




ஒரு நாள் அதைப் பார்த்த குறும்புக்காரப் பிள்ளைகளில் சிலர்," பாட்டி நிறைய காசு வச்சிருக்க போல இருக்கே அதுல... அதான் தனமும் அத மறைச்சு மறைச்சு வெச்சிக்கிறியா? உன்கிட்ட இருந்து ஒரு நாள் அதை எப்படியாவது வாங்குறேன் பாரு"..என்று வேடிக்கையாக் கூறினர்.


பாட்டியோ தன் பொக்கை வாயைக் காட்டிச் சிரித்து விட்டு அமைதியாக இலந்தை பழத்தை எடுத்துக் கொடுத்தாள். அன்று மாலை வீடு திரும்பியதும் காய்ச்சி வைத்துவட்டு சென்ற கஞ்சியை ஊற்றிக் குடித்தாள். தன் பையை எடுத்தாள். அதிலிருந்து பழைய நெகிழிப்பை ஒன்றை எடுத்தாள். 


அதற்குள் கருப்பு வெள்ளை படத்தினுள் மறைந்திருந்த ஒரு சிறுவனை பார்த்து... "என்ன பெத்த ராசா.. நீ மட்டும் சின்ன வயசுல அந்தத் திருவிழாவில் தொலையாம இருந்திருந்தா என்னை நீ இன்னிக்கு ராணி மாதிரி வச்சு காப்பாத்தி இருப்ப.. இந்தப் பள்ளிக்கூடத்து பிள்ளைகள எல்லாம் பார்க்கும் பொழுது உன்ன பாக்குற மாதிரி இருக்கும். அதான் அவங்க கேட்காமலேயே உனக்குப் புடிச்ச எலந்த பழத்தை அவங்களுக்கு அள்ளி கொடுத்துடுவேன்.. நீயே சாப்பிட்ட மாதிரி எனக்கு ஒரு சந்தோஷம்.. என்னவோ என் காலம் இப்படியே போயிடுச்சு... அந்த மாரியாத்தா உன்னை எங்க இருந்தாலும் நல்லா வச்சுக்கணும் பா" என்று சொல்லிவிட்டு கண்களில் துளிர்த்திருந்த நீரைத் துடைத்துக் கொண்டு அந்தப் புகைப்படத்தை பழையபடி பையில் வைத்து அதைத் தன் தலைக்கடியில் வைத்து படுத்துக்கொண்டாள்.


(கதாசிரியர் இரா. பிருந்துமாலினி, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடை நிலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்