சென்னை: ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குட் பேட் அக்லி படத்தின் தயாரிப் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை சுருக்கமாக ஆங்கிலத்தில் GBU என்று என்று அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. தற்போது வரை இந்த திரைப்படம் ரூ.150 கோடி வசூலித்து சாதனை படைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்தப் படத்தில் இளையராஜா இசையில் வெளியான ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி சஞ்சள் குருவி, இளமை இதோ இதோ என்ற 3 பாடங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த பாடல்களை தனது அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார். அத்துடன் ரூ.5 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தின் விளம்பர வீடியோவில் தனது இசையில் உருவான தங்க மகன் படத்தில் இடம் பெற்ற வா வா பக்கம் வா என்ற பாடலை பயன்படுத்தியதற்காக காப்புரிமை சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் இளையராஜா.
அதே போல், கடந்த 2017ம் ஆண்டு பின்னணி பாடகர் எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில் தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடல்களை பாடியதற்காக நோட்டீஸ் அனுப்பியிருந்தார் இளையராஜா. இதையடுத்து எஸ்பிபியும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், இனிமேல் இளையராஜா பாடல்களை என்னுடைய கச்சேரிகளில் பாட மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அஜித் நடித்த குட் பேட் அட்லி படத்திற்கும் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்படித்தக்கது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}