சென்னை: இசைஞானி இளையராஜாவின் விடுதலை 2 படத்தின் சிங்கிள் பாடல், தினம் தினமும் உன் நினைப்பு வெளியாகி விட்டது. கேட்க கேட்க அப்படி கிறங்கடிக்கிறது வரிகளும், குரல்களும்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி, சூரியின் நடிப்பில் மிரட்டலான படமாக வெளி வந்தது விடுதலை. இப்படத்தில் விஜய் சேதுபதியும் இருக்கிறார். முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பெரிய அளவிலான ஸ்பேஸ் இல்லை. ஆனால் விடுதலை 2 படத்தில் அவருக்குத்தான் அதிக ஸ்பேஸ் இருப்பதாக தெரிகிறது. இதில் மஞ்சுவாரியரும் இணைந்துள்ளார்.
இவர்கள் தவிர அட்டக்கத்தி தினேஷும் முக்கியப் பாத்திரத்தில் விடுதலை 2 படத்தில் நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யாவையும் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளாராம் வெற்றிமாறன்.
விடுதலை முதல் பாகத்தில் அதிகம் பேசப்பட்டது சூரியின் நடிப்பும், இளையராஜாவின் இசையும்தான். சூரியின் நடிப்பு வேற லெவலில் இருந்தது ஒரு பக்கம் என்றால், தனது அற்புதமான மெலடியால் அத்தனை பேரையும் கட்டி இழுத்திருந்தார் இளையராஜா. இந்த நிலையில் இப்போது விடுதலை 2 படத்தின் ஒரு சிங்கிள் வெளியாகியுள்ளது.
இளையராஜா மற்றும் அனன்யா பட் ஆகியோரின் குரலில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், வழி நெடுக காட்டுமல்லி பாடல் சாயலில் இருக்கிறது. ஆனாலும் அப்படியே வேறு விதமான உலகத்துக்குள் நம்மைக் கூட்டிச் செல்கிறது. மனம் முழுக்க இசையாலும், உணர்வுகளாலும் நம்மை சுண்டி இழுக்கிறார் இளையராஜா.
சிம்பிளான பாடல் வரிகளில் உணர்வுகளை சுண்டி இழுக்கும் மேஜிக் இளையராஜாவின் இசைக்கு மட்டுமே உண்டு. கூடவே அவரது அந்த கரகரப்பான குரலும் சேர்ந்து மனதை வருடிச் செல்கிறது.. காட்டுக் கத்தலாக வரும் பாடல்களுக்கு மத்தியில் இந்த பாடலை தினம் தினம் கேட்க நாம் நிச்சயம் மறக்க மாட்டோம்.
பாட்டைக் கேட்க கேட்க கிறுக்குப் பிடிப்பது போல இருக்கிறது.. அப்படி ஒரு வசீகர மயக்க மருந்துதான் இந்த தினம் தினமும் உன் நினைப்பு பாடல்.. கேட்டுப் பாருங்க.. உங்களுக்கும் அந்த மயக்கம் பீடிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}