"நீ வேணாம் போ".. கடுப்பான கள்ளக் காதலன்.. "கொலைவெறி கதகளி" ஆடிய கள்ளக்காதலி!

Apr 29, 2024,06:53 PM IST
மும்பை: கள்ளக்காதலனை, கள்ளக்காதலி கொடூரமாக அந்தரங்க உறுப்பில் தாக்கி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா, நாக்பூர் மாவட்டம், ஆகாஷ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவீந்திர குட்வே. 55 வயதான இவர் ஒரு வியாபாரி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார். இவர் கடந்த 19ஆம் தேதி வீட்டின் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவீந்திரகுட்வே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் இறந்த வியாபாரியின் அந்தரங்க உறுப்பில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரவீந்திர குட்வே கொலைக்கான காரணம் என்ன என்று, ரவீந்திர குட்வே மகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.



அப்போது அந்த விசாரணையில் அவரது தந்தைக்கும் அதே பகுதியில் வசித்து வந்த காஜல் ஜோக் (27) என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து போலீசார் கள்ளக்காதலி காஜல் ஜோக்கை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் காஜல்தான் கொலையைச் செய்தது தெரிய வந்தது. 

அதாவது வேறு ஒருவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார் காஜல். ஆனால் அதற்கு ரவீந்திர குட்வே இடையூறாக இருந்துள்ளார். இதனால் அவரைப் போட்டுத் தள்ள முடிவெடுத்தார்.  இந்த நிலையில், 19ஆம் தேதி  காஜல் ஜோக்கை அழைத்து திருமணம் குறித்து விசாரித்துள்ளார் ரவீந்திர குட்வே‌. அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் முட்டிக்கொண்டு உள்ளது. ஆத்திரமடைந்த காஜல் ஜோக் என்ன செய்வதென்று அறியாமல் வியாபாரி ரவீந்திர குட்வேயின் அந்தரங்க உறுப்பில் தாக்கியுள்ளார். 

அவர் வலி தாங்க முடியாமல் துடிதுடித்து இறந்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் காஜல். இந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து தற்போது காஜலைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்