சென்னை: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை 7 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று 12 மாவட்டங்களுக்கும் நாளை 7 மாவட்டகளிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை 7 மாவட்டங்களில் கனமழை செய்யும் என்றும், அடுத்த மாதம் 4ம் தேதி வர இந்த மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேதிவாரியாக வானிலை மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு:

30.09.2024
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
01.10.2024
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
02.10.2024
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
03.10.2024
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
04.10.2024
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், புதுச்சேரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
05.10.2024 மற்றும் 06.10.2024
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
செப்டம்பர் 30, அக்டோபர் 1,2,3 ஆகிய நாட்களில் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடை 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}