சென்னை: தமிழ்நாட்டில் வடக்கு மற்றும் உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று 3 நாட்களுக்கு வெப்ப அலை நிலவக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மே 1ம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக் கூடும் என்றும் அது தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் கடும் வெயில் வெளுத்துக் கொண்டிருக்கிறது. காலையிருந்து வெயில் வறுத்தெடுக்கிறது. இன்று தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக இடங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயர்ந்து காாணப்பட்டது.

அதிகபட்சமாக 8 இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவானது. ஈரோட்டில், 42.4 டிகிரி செல்சியஸ், சேலம் 41.9 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் 41.8, தர்மபுரி 41, கரூர் பரமத்தி 40.5, திருத்தணி 402, வேலூர் 401, நாமக்கல் 40 டிகிரி செல்சியஸ் என வெப்ப நிலை பதிவாகியிருந்தது.
உள் மாவட்டங்களில் பரவலாக 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகியிருந்தது. சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 36.7 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 35.2 டிகிரி செல்சியஸும் வெப்ப நிலை பதிவாகியிருந்தது.
விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!
பார்வதி தேவியின் அவதாரம்.. தேவாங்க குலத்தவரின் குல தெய்வம்.. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்!
வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!
தாலாட்டும் நினைவுகள்!
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
முடியலடா.. முடியலையே!
முகத்துக்குப் போடலாம்.. மனதுக்குப் போடலாமா.. Massive Mask!
இப்படியும் ஒரு விழாவா.. சின்ன சேலத்தை அசர வைத்த ஜவுளி சங்க விழா!
சதம்!
{{comments.comment}}