சென்னை: தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென் மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அக்னி நட்சத்திர காலத்தில் நிலவும் வெப்பம் சற்று தணிந்து குளுமை நிலவி வருகிறது.மேலும் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாலும் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.
குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று:
தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை காற்று வீச கூடும். மேலும் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 16 :
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 17:
நீலகிரி,கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை 3.4செமீ, பாம்பன் 2.6 செமீ, கோவையில் 2.3 செமீ, மழையும் பதிவானது. செய்யாறு மற்றும் பாளையங்கோட்டையில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவானது. கோவில்பட்டியில் 1.9 சென்டிமீட்டர் மழையும், திருச்சி சிறுகனூரில் 1.8 சென்டிமீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் 1.5 சென்டிமீட்டர் மழையும் பதிவானது.
புதுவருட டைரி!
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
{{comments.comment}}