ஒன்னையே தாங்க முடியல.. இதுல ரெண்டா?.. ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு உருவாகிறது.. வானிலை மையம்

Oct 18, 2024,02:24 PM IST

சென்னை:   வங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


வடகிழக்கு பருவ மழை ஆரம்பத்திலேயே தமிழகத்தை ஒரு தாக்கு தாக்கி சென்றுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட தமிழகத்தில் அதிக அளவில் மழை பெய்யும் என்று கூறப்பட்ட நிலையில், அது ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் தமிழகம் தப்பித்தது.




இந்தநிலையில், தற்போது வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில், அதுவும் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு பகுதியில் காற்று சுழற்சி நிலவி வருகிறது. மத்திய அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், அதனை தொடர்ந்து மத்திய வங்கக் கடலில் வரும் 22ம் தேதியன்று  குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும் இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு திசையை நோக்கி நகரும் என்றும், மேற்கு-வடக்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய பகுதியை விட்டு விலகி செல்லும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்ததாக அக்டோபர் 22ம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இந்த புயல் வடக்கு நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.


எப்படியோ 2வது ரவுண்டிலும் நாம தப்பிச்சுருவோம் போல.. வரட்டும் வரட்டும்.. எத்தனை ரவுண்டு வந்தாலும் சமாளிப்போம்ல!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?

news

வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

news

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது

அதிகம் பார்க்கும் செய்திகள்