திருவனந்தபுரம்: கேரளாவில் மே 31ம் தேதியே தென் மேற்குப் பருவ மழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே மழை தொடங்கவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1ம் தேதி பருவ மழை கேரளாவில் தொடங்கும். ஆனால் தற்போது முன்கூட்டியே அது தொடங்கவுள்ளது. தென் மேற்குப் பருவ மழையானது கேரளாவில் தொடங்கி படிப்படியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நான்கு மாத காலம் வரை நீடிக்கும். நாட்டின் வருடாந்திர மழைப் பொழிவில் 70 சதவீத மழையானது இந்த தென் மேற்குப் பருவ மழைக்காலத்தில்தான் நமக்குக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயத்திற்கும் நாட்டின் நீர் வளத்திற்கும் இந்த மழை மிக முக்கியமானது.
ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இந்த மழை நீடிக்கும். பெரும்பாலான அணைக்கட்டுகள், நீர்த் தேக்கங்கள் இந்த மழையைத்தான் நம்பி உள்ளன. இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலான மழைப் பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் 2017, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கேரளாவில் மே மாதத்தில் பருவ மழை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென் மேற்குப் பருவ மழையால் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}