- மஞ்சுளா தேவி
சென்னை: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை நாளை வரை தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது இலங்கைக்கு தென்கிழக்கிலிருந்து குமரி கடல் பகுதியில் தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கிறது. இது தற்போது 4 கிலோ மீட்டர் வேகத்தில் தான் நகர்கிறது. இதனால் நாளை வரையில் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிக கன மழை எச்சரிக்கை:
குமரி, நெல்லை, தூத்துக்குடி ,தென்காசி, ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை :
தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை:
நீலகிரி, கோவை, திருப்பூர் ,திண்டுக்கல், மதுரை ,ராமநாதபுரம் ,ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தற்போது அதி கன மழை பெய்வதற்கான காரணம் என்னவென்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தரின் விளக்கியதாவது:
ஒரு வளிமண்டல சுழற்சி நிலவும் போது இந்த அளவுக்கு அதீத மழைப்பொழிவு என்பது இருக்காது. ஆனால் தற்போது அதிக மழைப்பொழிவு பெய்து வருகிறது. ஏற்கனவே 15 ,16 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என அறிவித்திருந்தோம். அதே போல் தான் தற்போது பெய்துள்ளது.
20 செமீக்கு மேல் பெய்தாலே சிவப்பு நிற எச்சரிக்கை என அறிவிக்கப்படும். அதற்காக 50 சென்டிமீட்டர் ,95 சென்டிமீட்டர் என பெய்தால் தனித்தனியாக எச்சரிக்கை என்பது கொடுக்க முடியாது. ஏனென்றால் கனமழை, மிக கனமழை, அதிக கனமழை என்று மூன்று பிரிவுகளாக பிரிக்க முடியும்.
7 முதல் 11 சென்டிமீட்டர் அளவு மழை பெய்தால் அது கனமழை எனவும், 12 முதல் 20 செமீ வரை மழை பெய்தால் அது மிக கனமழை எனவும், 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தால் அதை அதிக கன மழை என்றும் அறிவிக்க முடியும். ஒரு மாவட்டத்தில் எந்த அளவுக்கு மழை பொழியும் என்பதை குறிப்பிட்டு அறிவிக்க முடியாது.
ஏனென்றால் 20 சென்டிமீட்டருக்கு அதிகபட்சமாக எவ்வளவு மழை பெய்தாலும் அது அதிகன மழைக்கான ரெட் அலர்ட் என்று தான் குறிப்பிடுவோம். இனி வருங்காலத்தில் கனமழை என்பது அதிகரித்துக் கொண்டே தான் செல்லும். மேலும் தற்போது பெய்யும் அதிக கன மழை மேக வெடிப்பினால் அல்ல. அது கனமழையாகத்தான் பெய்து வருகிறது என விளக்கம் அளித்தார்.
இந்த வருடம் மழைப்பொழிவு என்பது கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் 103 சதவீதம் இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 68 சதவீதம் இயல்பை விட அதிகமாகவும், தென்காசியில் 80% இயல்பை விட அதிகமாகவும் பெய்துள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}