சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி கட்சிகளை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை பல்வேறு இடங்களுக்குச் சென்று அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சிகள் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரித்து முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சி சார்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் நடிகர், நடிகைகள் பாட்டுப் பாடியும், ஜாலியாக பேசியும் வாக்கு சேகரிப்பார்கள் என்பதாலும், அவர்களை வேடிக்கை பார்க்க கூட்டம் அலைமோதும் என்பதாலும் எப்போதுமே இந்த ஸ்டார் பேச்சாளர்களுக்கு தனி மவுசு இருக்கும். அந்த வரிசையில் தற்போது பல நட்சத்திர பேச்சாளர்கள், காமெடி நடிகர்கள் என லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பேச்சாளரும், காமெடி நடிகருமான இமான் அண்ணாச்சி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சார விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 8ஆம் தேதி- மத்திய சென்னை, ஏப்ரல் 9ஆம் தேதி -வட சென்னை, ஏப்ரல் 10ஆம் தேதி- நீலகிரி, ஏப்ரல் 11ஆம் தேதி- திருப்பூர், ஏப்ரல் 12ஆம் தேதி- கோயம்புத்தூர், ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இமான் அண்ணாச்சி தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}