டெல்லி : செப்டம்பர் மாதம் முதல்வர் பல மாற்றங்கள் அரசு துறையில் வர உள்ளது. குறிப்பாக நிதித்துறையில் முக்கிய மாற்றங்கள் பலவும் அமலுக்கு வர உள்ளது. சில மாற்றங்கள் செப்டம்பர் 1 ம் தேதியான இன்று முதலும், இன்னும் சில மாற்றங்கள் இந்த மாத இறுதியிலும் வர உள்ளன. அப்படி என்னவெல்லாம் மாற்றங்கள் வரப் போகிறது, மக்களிடம் இது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிந்து கொள்வோம்.
ஆக்சிஸ் வங்கி கிரெட் கார்டு வைத்திருப்போருக்கான விதிகள் இந்த மாதத்தில் இருந்து மாற போகிறது. கிரெட் கார்டிற்கான ஆண்ட கட்டணம் ரூ.10000 லிருந்து ரூ.12,500 ஆக உயர்கிறது.
ஆதார் கார்டில் இலவசமாக ஆன்லைனில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆதாரில் பிரச்சனை இருப்போர், அப்டேட் செய்யாமல் இருந்தவர்கள் ஆன்லைன் மூலமாக இலவசமாக மாற்றிக் கொள்ளும் திட்டத்தை மார்ச் 14 ம் தேதி மத்திய அரசு துவக்கியது. முதலில் ஜூன் 14 வரை மாற்றிக் கொள்ளலாம் என சொல்லப்பட்ட நிலையில், பிறகு இந்த காலக் கெடு செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டது.
ரூ.2000 நோட்டு வைத்திருப்போர் அவற்றை மாற்றிக் கொள்வதற்கான காலக் கெடு இம்மாதம் 30 ம் தேதியுடன் நிறைவடைகிறது. ரூ.2000 க்களை வங்கிகளில் டெபாசிட் செய்தோ அல்லது பணமாக மாற்றிக் கொள்ளவோ செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். செப்டம்பர் 30 க்கு பிறகு ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் காள்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சொத்துக்கள் வாங்குவதற்கு ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயம் என்பது இந்த நிதியாண்டு துவக்கத்தில் இருந்தே சொல்லப்பட்டு வருகிறது. அதே போல் பிபிஎஃப், அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றில் கணக்கு வைத்திருப்போர் தங்களின் ஆதார் எண்ணை செப்டம்பர் 30 ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் கணக்கு முடக்கப்படும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}