இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான வழக்குகளில் அடுத்தடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது திருமணமும் சட்டத்திற்கு புறம்பானது என சொல்லி, இதற்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மீதும், அவரது மனைவி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீதும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் பாகிஸ்தான் கோர்ட் அடுத்தடுத்து தீர்ப்பு வழங்கி வருகிறது. 71 வயதாகும் இம்ரான் கான் தற்போது சிறையில் இருந்து வருகிறார்.
நாட்டின் ரகசியங்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில் தான் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசுக்கு சொந்தமான பரிசுப் பொருட்களை விற்றதாக இவரது மனைவி மற்றும் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா கானின் திருமணம் செல்லாது என்றும், திருமண சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கும், அவரது மனைவிக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. புஷ்ரா கான், இஸ்லாம் திருமண சட்டத்தின் படி முதல் கணவருடனான விவகாரத்து காலம் முடிவதற்கு முன்பாகவே இம்ரான் கானை திருமணம் செய்து கொண்டுள்ளார். 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் ரகசியமான முறையில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக முதல் முறையாக பதவியேற்பதற்கு 7 மாதங்களுக்கு முன்பு தான் இம்ரான் கான் - புஷ்ரா கானின் திருமணம் நடந்துள்ளது.
திருமண சட்டத்தை மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டது. முதலில் இதை மறுத்த இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, பிறகு சட்ட விரோதமாகவே இவர்களின் திருமணம் நடைபெற்றதாக ஒப்புக் கொண்டது. ஆனால் தாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என இம்ரான் கானும் அவரது மனைவியும் மறுத்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் இம்ரான் தேர்தலில் போட்டியிட தடை, அடுத்தடுத்த வழக்குகளில் தண்டனை என விதிக்கப்பட்டு வருவது தேர்தலில் அவரது கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இம்ரான் கான் தற்போது ராவல்பெண்டியில் உள்ள கர்ரிசன் நகர சிலையில் அடைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி புஷ்ரா கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஹில்டாப் மான்சனில் தன்னுடைய தண்டனை காலத்தை அனுபவித்து வருகிறார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}