செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கே.எல். ராகுல் அபாரமாக ஆடி சதம் போட்டார்.
கே.எல். ராகுலுக்கு இது எட்டாவது டெஸ்ட் சதமாகும். முன்னணி வீரர்கள் தடுமாறி வந்த நிலையில் கே.எல். ராகுல் நிலைத்து ஆடி சதம் போட்டது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3- டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்றது. அதில், ஆளுக்கு ஒரு வெற்றியைப் பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது

அடுத்து ஒரு நாள் தொடர் நடந்தது. அதை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது டெஸ்ட் போட்டித் தொடர் தொடங்கியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் பேட்டிங் பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்,
ஜெய்ஸ்வால்17, சுப்மன் கில் 2 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஜயர் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடினர். இருவரும் இணைந்து 68 ரன்களைக் குவித்தனர்.
இந்த நிலையில் ரபாடா வீசிய அபாரமான பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் போல்ட் ஆனார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 38 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா தடுமாறியது. இப்படி முக்கிய வீரர்கள் தடுமாறிய நிலையில் மறுபக்கம் கே.எல். ராகுல் நிலைத்து நின்று ஆடி 133 பந்துகளில் 101 ரன்களை அடித்து அசத்தினார். இறுதியில் இந்தியா 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
கே.எல். ராகுலுக்கு இது எட்டாவது டெஸ்ட் சதமாகும். மேலும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த 2வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}