அட நம்புங்க...சென்னை - திருப்பதி, சென்னை - புதுச்சேரி பஸ் டிக்கெட் ரூ.1

Aug 12, 2023,11:23 AM IST
டெல்லி : நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள முக்கிய வழித்தடங்களில் ரூ.1 டிக்கெட் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என அறிவிக்கபப்ட்டுள்ளது. 

க்ரீன்செல் மொபைலிட்டி நிறுவனம் இன்டர்சிட்டி எலக்ட்ரானிக் ஏசி கோச் பஸ்களில் இந்த சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இந்தியா-இந்தூர்-போபால், டில்லி - சண்டிகர், டில்லி - ஆக்ரா, டில்லி - ஜெய்பூர், டில்லி - டேராடூன், ஆக்ரா- ஜெய்பூர், பெங்களூரு - திருப்பதி, சென்னை - திருப்பதி, சென்னை - புதுச்சேரி, ஐதராபாத் - விஜயவாடா ஆகிய வழித்தடங்களில் இந்த ரூ.1 கட்டண பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 



இந்த வழித்தடங்களில் ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 15 வரை ரூ.1 என்ற கட்டணத்தில் பஸ் டிக்கெட்களை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்தள்ளது. ஆகஸ்ட் 15 வரை, டிக்கெட்கள் விற்பனை முடியும் வரை மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NueGo வின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப்பில் சென்று இந்த டிக்கெட்களை முன்பதிவு செய்த கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இப்படி ஒரு புரட்சிகரமான சேவையை வழங்குவதில் தாங்கள் ஆவலுடன் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

அதிகம் பார்க்கும் செய்திகள்