டெல்லி: தேர்தல் திருவிழா இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. லோக்சபா தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான சில புள்ளிவிவரங்களை இப்போது பார்ப்போம்.
நாடு முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் எஸ்சி தொகுதிகள் 84 ஆகும், எஸ்டி தொகுதிகள் 47. தனித் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 131 ஆகும். பொதுத் தொகுதிகளின் எண்ணிக்கை 412 ஆகும்.

நாட்டிலேயே அதிக தொகுதிகளைக் கொண்ட டாப் 5 மாநிலங்கள்
உத்தரப் பிரதேசம் - 80
மகாராஷ்டிரா - 48
மேற்கு வங்காளம் - 42
பீகார் - 40
தமிழ்நாடு - 39
நாடு முழுவதும் உள்ள மொத்த வாக்காளர்கள் - 96,88,21,926. இதில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 2.63 கோடி ஆகும். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 49,72,31,994, பெண் வாக்காளர்கள் 47,15,41,888 ஆவர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 48,044 பேர் உள்ளனர்.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எண்ணிக்கை 88 லட்சத்து 35 ஆயிரத்து 449 பேர் ஆவர். 18 முதல் 19 வயதுக்குள் இருக்கும் வாக்காளர்கள் 1 கோடியே 84 லட்சத்து 81 ஆயிரத்து 610 பேர் ஆவர். 20 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் - 19,74,37,160 ஆவர்.
80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் 1,85,92,918 ஆவர். 100 மற்றும் அதற்கு மேல் வயதுடைய வாக்காளர்கள் இந்தியாவில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 791 பேர் உள்ளனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}