பட்ஜெட்டில்.. பல மாநிலங்கள் புறக்கணிப்பு.. நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி போராட்டம்!

Jul 24, 2024,07:18 PM IST

டெல்லி:   மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து  இந்தியா கூட்டணி கட்சி எம்.பிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி  வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக  பொறுப்பேற்ற பின் நேற்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை ஏழாவது முறையாக  தாக்கல் செய்தார். 




இதில் பல்வேறு வரி சலுகைகள், வரி குறைப்பு தொடர்பான பல அறிவிப்புகளை  வெளியிட்டார்.  அதேசமயம் பீகார், மற்றும் ஆந்திராவிற்கு நிறைய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த இரண்டு மாநிலங்களுக்குத்தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது. மேலும் பட்ஜெத் தாக்கலின்போது தமிழ் மற்றும் தமிழ்நாடு என்ற வார்த்தைகள் ஒரு தடவை கூட இடம்பெறவில்லை. தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களும் அறிவிக்கவும் இல்லை. நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. இது தமிழ்நாட்டிலும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரும் துரோகம் என முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் நிதி ஆயோக் மாநாட்டை தான் புறக்கணிப்பதாகவும், அவர் அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது இந்தியா கூட்டணி முதல்வர்களும் புறக்கணிப்பு முடிவை அறிவித்துள்ளனர்.




இந்த நிலையில் பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் குதித்தனர். நாடாளுமன்ற நுழைவாயிலில் கூடி இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கப் போராட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, இ. கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்களும் கலந்து கொண்டனர். மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த சமாஜ்வாதி, திரிணாமுல், காங்கிரஸ், ஆம் ஆத்மி, உள்ளிட்ட எம்பிகளும் பங்கேற்றுள்ளனர். திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்