சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை சுருட்டிப் போட்டு வெற்றி பெற்றுள்ளது இந்தியா.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் அதி அற்புதமாக ஆடி சதம் (113) போட்டார். ரவீந்திர ஜடேஜா 83 ரன்களைக் குவித்தார். வங்கதேச அணியின் பந்து வீச்சாளர் ஹசன் மகமுத் 5 விக்கெட்களை சாய்த்தார்.
இதையடுத்து வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில் அஸ்வினின் சிறப்பான பந்து வீச்சின் காரணமாக வங்கதேச அணி 149 ரன்களில் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதைத் தொடர்ந்து இந்தியா தனது 2வது இன்னிங்ஸை ஆடியது. முதல் இன்னிங்ஸில் அஸ்வின் சதம் அடித்தது போல இந்த இன்னிங்ஸில் சுப்மன் கில் (119), ரிஷப் பந்த் (109) ஆகியோர் சதம் விளாச இந்தியா 4 விக்கெட்களுக்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
பின்னர் ஆடிய வங்கதேச அணி இன்று 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அஸ்வின் இந்த முறையும் ஸ்டிரைக் செய்தார். அபாரமாக பந்து வீசிய அவர் 5 விக்கெட்களைச் சாய்த்து வங்கதேசத்தை நிலைகுலைய வைத்து விட்டார். பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சென்னை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதை இந்த டெஸ்ட் போட்டியிலும் இந்தியா நிரூபித்தது.
சென்னை டெஸ்ட் போட்டியில் அஸ்வின்தான் நாயகனாக ஜொலித்தார். இது அவருக்கு 37வது ஐந்து விக்கெட் சாதனையாகும். சென்னை டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் அஸ்வினுக்கே கிடைத்தது.
அடுத்து செப்டம்பர் 27ம் தேதி கான்பூரில் 2வது மற்றும் டெஸ்ட் போட்டி நடைபெறும். இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டித் தொடர் தொடங்கும். முதல் போட்டி அக்டோபர் 6ம் தேதி குவாலியரில் நடைபெறும். அக்டோபர் 9ம் தேதி 2வது போட்டி டெல்லியில் நடைபெறும். 3வது போட்டி அக்டோபர் 12ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}