அதிர வைத்த அஸ்வின் சுழல்.. சுருண்டு போன வெஸ்ட் இண்டீஸ்.. இந்தியா அசத்தல்

Jul 15, 2023,10:16 AM IST

டொமினிகா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி அசத்தியுள்ளது.

இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நடந்து வந்தது. இதில் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் குறிப்பாக அஸ்வினை சமாளிக்க முடியாமல் ஆடிப் போய் விட்டது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.



முதல் இன்னிங்ஸில் அஸ்வின் சுழலை சமாளிக்க முடியாமல் 150 ரன்களில் சுருண்டிருந்தது மேற்கு இந்தியத் தீவுகள். அந்த இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்களைச் சாய்த்து பிரமிக்க வைத்தார். அடுத்து விளையாடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 412 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து ஆட வந்த மேற்கு இந்தியத் தீவுகளை மீண்டும் அஸ்வின் பதம் பார்த்து விட்டார். இதனால்  130 ரன்களிலேயே சுருண்டு பரிதாபமாக தோல்வியைத் தழுவியது மேற்கு இந்தியத் தீவுகள்.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களைத் தூக்கிய அஸ்வின், 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட்களை வீழ்த்தி அதிர வைத்தார்.  வெறும் 71 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார்.  முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் வீழ்த்திய ஜடேஜாவுக்கு இந்த முறை 2 விக்கெட்கள் கிடைத்தன.

இந்த வெற்றி மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

அஸ்வின் தற்போது 33 முறை 5 விக்கெட்களைச் சாய்த்து அசத்தியுள்ளார். இவர் எப்போதுமே மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 21.3 ஓவர்களில் 71 ரன்களுக்கு 7 விக்கெட் வீழ்த்தியதே வெளிநாடுகளில் அஸ்வினின் பெஸ்ட் பந்து வீச்சாகவும் மாறியுள்ளது.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக ஆடி 171 ரன்களைக் குவித்தார். வெளிநாடு ஒன்றில் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர்  என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.  விராட் கோலி 76 ரன்களைக் குவித்தார்.  விராட் கோலி தனது பேட்டிங்கில் பெரும் சிரமத்தையும், தடுமாற்றத்தையும் சந்தித்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

2வது டெஸ்ட் போட்டி வருகிற 20ம் தேதி டிரினிடாடில் தொடங்குகிறது. 2002ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா இதுவரை மேற்கு இந்தியத் தீவுகளில் எந்த  டெஸ்ட் தொடரிலும் தோற்றதே இல்லை. அந்த  சாதனையை இந்த முறையும் அது தக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்