"இந்தியா"வைக் காணோம்.. பிரதமர் நரேந்திர மோடி முன்பு பளிச்சிட்ட "பாரத்"

Sep 09, 2023,12:53 PM IST
டெல்லி: ஜி-20 மாநாட்டு தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இருக்கைக்கு முன்பு இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பாரத் என்ற பெயர் இடம் பெற்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முதன்முறையாக ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இது நம் நாட்டிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவமாகும்.  உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருகிறது. 



ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க அர்ஜென்டினா, பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 29 உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.

இன்று காலை ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள உலக தலைவர்கள் பாரத் மண்டபம் வந்தனர். அவர்கள் அனைவரையும் பிரதமர் மோடி வரவேற்றார். அனைவரின் வருகையை தொடர்ந்து மாநாடு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பிரதமர் முன்பு இருந்த பெயர்ப் பலகை அனைவரையும் கவர்ந்தது. ஒவ்வொரு தலைவருக்கு முன்பும் அவர்கள் சார்ந்த நாட்டின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. 

பிரதமர் மோடி முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் பாரத் என்ற பெயர் இடம் பெற்றிருந்தது. வழக்கமாக இந்தியா என்றுதான் பெயர் இடம் பெற்றிருக்கும். ஆனால் முதல் முறையாக பாரத் என்ற பெயர் இடம் பெற்றிருந்தது.  சமீப காலமாக மத்திய அரசு நாட்டின் பெயரை பாரத் என்றே பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்