ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் இஸ்ரோ புதிய மைல்கல்லை எட்டும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. SpaDex என்று அழைக்கப்படும் விண்கலங்களை விண்வெளியில் நிலை நிறுத்தி ஒருங்கிணைக்கும் திட்டம்தான் அது. இன்று இரவு இரு விண்கலங்களை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக இத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது இஸ்ரோ.
விண்வெளியில் விண்வெளி ஆய்வு நிலையம் அமைப்பதற்கான முன்னோடித் திட்டம்தான் இந்த SpaDex திட்டம். அதாவது விண்வெளியில் விண்கலங்களை நிலை நிறுத்தி அவற்றை ஒருங்கிணைத்து ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் அவற்றை பிரித்துத் தனித் தனியாக இயக்குவது என்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

பிஎஸ்எல்வி 60 ராக்கெட் மூலம் இன்று இரு விண்கலங்கள் (SDX01 Chaser மற்றும் SDX02 Target) விண்வெளியில் ஏவப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்டவை. இந்த விண்கலங்கள் இரண்டும் தரையிலிருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்படும். அங்கு வைத்து இரு விண்கலங்களும் ஒருங்கிணைக்கப்படும். இது வெற்றிகரமாக நடந்தால் சர்வதேச அளவில் இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா போன்ற வெகு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணையும்.
மேலும் இந்தியாவின் சர்வதேச விண்வெளி மையக் கனவையும் இது எளிதாக்கும். நிலவுப் பயணம் உள்ளிட்ட எதிர்கால விண்வெளி ஆய்வுத் திட்டங்களுக்கும் இது பேருதவி புரியும் என்பதால் இந்தத் திட்டம் இந்தியாவுக்கு முக்கியமானதாகும்.
முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள திட்டம் இது. இதில் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டவை என்பது முக்கியமானது.
இன்று இரவு 10 மணியளவில் இந்த இரு விண்கலங்களையும் பிஎஸ்எல்வி 60 ராக்கெட் விண்ணில் செலுத்தியது. அதன் பின்னர் இரு விண்கலங்களும் திட்டமிட்டபடி விண்வெளியில் விடப்பட்டு புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. அடுத்து இந்த இரு விண்கலங்களையும் ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெறும். ஒருங்கிணைப்பது மற்றும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப்பது என இரு விதமான சோதனைகளும் செய்து பார்க்கப்படும். இது வெற்றி பெற்றால் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெறும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
பீகாரில் விறுவிறுப்பான சட்டசபைத் தேர்தல்.. சுறுசுறுப்பான முதல் கட்ட வாக்குப் பதிவு
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
ஐப்பசி கிருத்திகை.. முருகனுக்கு உகந்த நாள்.. விரதம் இருந்தால் வேண்டியது கிடைக்கும்
சும்மா இருக்கும் மனம் தெய்வீகத்தின் பட்டறை/பணியிடம்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 06, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை இருக்குனு தெரியுமா... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும்: திருமாவளவன்!
{{comments.comment}}