டெல்லி: இஸ்ரேல் -ஹமாஸ் போருக்கு மத்தியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் தீவிரமாகியுளளது. இஸ்ரேல் முழு அளவில் போரில் இறங்கியுள்ளது. காஸா முனையை சின்னாபின்னமாக்கி வருகிறது. உயிரிழப்பைப் பற்றி அது கவலைப்படவில்லை. மாறாக, காஸாவை நிர்மூலமாக்கி அந்தப் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. ஹமாஸை பூமியிலேயே இல்லாத அளவுக்கு அழித்தொழிப்போம் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேலின் இந்த போர் வேகத்தில் சிக்கி ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர். ஹமாஸுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்காததால் அந்த அமைப்பினர் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்தியா களம் இறங்கியுள்ளது. ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் இந்த மீட்புப் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. இஸ்ரேலில் கிட்டத்தட்ட 18,000 இந்தியர்கள் உள்ளனர். இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்களை இந்தியா ஆயத்த நிலையில் வைத்துள்ளது. பிற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்குத் திரும்ப விண்ணப்பித்திருப்போரின் முதல் பிரிவினர் இன்று சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகமும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகத்திற்கு விண்ணப்பித்திருப்போருக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்
முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
எது மக்களாட்சி?
தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
{{comments.comment}}