புனே: இந்தியாவில் கடந்த 12 வருடமாக எந்த டெஸ்ட் தொடரையும் இழக்காமல் இருந்து வந்த இந்தியா, அந்த சாதனையை இன்று இழந்து விட்டது. நியூசிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
கடந்த 2012ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த எந்த டெஸ்ட் தொடரிலும் இந்தியா தோற்றதில்லை. ஆனால் தற்போது நியூசிலாந்துடன் நடந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா மிக மோசமான தோல்வியைத் தழுவியிருந்தது. இந்த நிலையில் புனேவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வியுற்று, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
நியூசிலாந்து பந்து வீச்சாளர் மிட்சல் சான்ட்னரின் அனல் பறக்கும் பந்து வீச்சு காரணமாக, அந்த அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. முன்னதாக நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவின் சார்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் சாய்த்தனர். இதையடுத்து ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அதிரடி காட்டும் என்று எதிர்பார்த்த நிலையில் 156 ரன்களில் சுருண்டு ஷாக் கொடுத்தது. மிட்சல் சான்ட்னர் 7 விக்கெட்களையும், கிளன் பிலிப்ஸ் 2 விக்கெட்களையும், டிம் செளதி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது 2வது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்கள், ஜடேஜா 3, அஸ்வின் 2 விக்கெட்களைச் சாய்த்தனர். இதையடுத்து 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்தியாவுக்கு மிட்சல் சான்ட்னர் எமனாக வந்த சேர்ந்தார். அதிரடியாக பந்து வீசிய அவர் 6 விக்கெட்களைச் சாய்த்தார். அஜாஸ் படேல் 2 விக்கெட்களை சாய்க்க, பிலிப்ஸுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. இறுதியில், 245 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது இந்தியா.
இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா போராடி 42 ரன்களைக் குவித்தார். சுப்மன் கில் 23, விராட் கோலி 17, வாஷிங்டன் சுந்தர் 21, அஸ்வின் 18 ரன்கள் எடுத்தனர். ரிஷப் பந்த் டக் அவுட் ஆனார். ரோஹித் சர்மா 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}