ராஜ்கோட்: இங்கிலாந்து அணியை புரட்டிப் போட்டு சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது இந்தியா. ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை ஈட்டியுள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடித்த இரட்டை சதம், ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பந்து வீச்சு உள்ளிட்டவை இந்தியாவின் வெற்றிக்கு அடிகோலின. 3வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்திலேயே இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்து விட்டது.
இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் தனது இரட்டை சத்தைப் பூர்த்தி செய்தார். மறுபக்கம் 41 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்தை ஜடேஜா நையப்புடைத்து விட்டார். இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 122 ரன்களுக்கு சுருண்டு போனது. முன்னதாக 557 ரன்கள் என்ற இலக்கை குறி வைத்து இங்கிலாந்து ஆடி வந்தது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வெல்ல முடியும்.
டெஸ்ட் போட்டிகளில் 400 ரன்களுக்கு மேற்பட்ட ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தியா இதுவரை 577 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த டெஸ்ட் வரலாற்றில் இதுவே மிகப் பெரிய வெற்றியும் கூட.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு 2021ம் ஆண்டு வாங்கடே ஸ்டேடியத்தில் வைத்து நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்திருந்தது. அதன் பிறகு இப்போதுதான் மிகப் பெரிய டெஸ்ட் வெற்றியை இந்தியா பெற்றுள்ளது.
ஜெய்ஸ்வால் 236 பந்துகளைச் சந்தித்து 214 ரன்களைக் குவித்திருந்தார். மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் அவர் 12 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.
இந்திய பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும், பும்ரா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}