புது தில்லி: இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் 20.7 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும். மேலும் 2038 ஆம் ஆண்டுக்குள் 34.2 டிரில்லியன் டாலரை எட்டி, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாற வாய்ப்புள்ளது என்று எர்னஸ்ட் அன்ட் யங் நிறுன அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவின் அதிகப்படியான வரிகளால் ஏற்படும் பாதிப்பை, சரியான நடவடிக்கைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் உண்மையான GDP வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு 0.1% மட்டுமே இருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
EY-ன் ஆகஸ்ட் 2025 பொருளாதார கண்காணிப்பு அறிக்கையின்படி, இந்தியா உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் மிகவும் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு காரணம், அதிக சேமிப்பு மற்றும் முதலீட்டு விகிதங்கள், சாதகமான மக்கள் தொகை மற்றும் நிலையான நிதி நிலைமை ஆகியவை ஆகும். இந்தியாவின் இந்த வளர்ச்சி 2047-க்குள் "விக்ஸித் பாரத்" என்ற இலக்கை அடைய உதவும்.

சீனா 2030 ஆம் ஆண்டுக்குள் 42.2 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் முதலிடத்தில் இருந்தாலும், வயதான மக்கள் தொகை மற்றும் அதிகரித்து வரும் கடன் ஆகியவை சவாலாக உள்ளன. அமெரிக்கா வலுவாக இருந்தாலும், GDP-யில் 120% அதிகமான கடன் மற்றும் குறைந்த வளர்ச்சி விகிதங்களை எதிர்கொள்கிறது. ஜெர்மனி மற்றும் ஜப்பான் வளர்ந்த நாடுகளாக இருந்தாலும், அதிக வயதுடைய மக்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தை அதிகம் சார்ந்திருப்பது போன்ற தடைகளை கொண்டுள்ளன என்று EY அறிக்கை கூறியுள்ளது.
உலகளாவிய பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் உள்நாட்டு தேவை மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் அதிகரித்து வரும் வலிமை காரணமாக தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரங்களை ஒப்பிடுவதற்கு, சந்தை மாற்று விகிதங்களை விட வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையிலான ஒப்பீடு மிகவும் பொருத்தமானது என்று அறிக்கை கூறுகிறது.
இந்த அளவீட்டின்படி, சர்வதேச நிதியம், 2025ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபியை 14.2 டிரில்லியன் டாலர் ஆக மதிப்பிட்டுள்ளது. இது சந்தை மாற்று விகிதத்தில் உள்ள அளவை விட 3.6 மடங்கு பெரியது. இதன் மூலம், இந்தியா ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
2030-க்கு பிறகும், இந்தியா மற்றும் அமெரிக்கா முறையே 6.5% மற்றும் 2.1% என்ற சராசரி வளர்ச்சி விகிதத்தை (IMF கணிப்புகளின்படி) பராமரித்தால், இந்தியா 2038-க்குள் PPP அடிப்படையில் அமெரிக்க பொருளாதாரத்தை விட முன்னேறும் என்று அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பலமே இளைஞர்கள்தான். கூடுதலாக, அதிகரித்து வரும் உள்நாட்டு தேவை மற்றும் நிலையான நிதி கண்ணோட்டம் ஆகியவற்றையும் இந்தியா கொண்டுள்ளது. இது நீண்ட கால வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்குகிறது.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}