டெல்லி: டி 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்தியா தனது சுற்றுப் போட்டிகளை முழுக்க முழுக்க அமெரிக்காவில் விளையாடவுள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தானுடனான போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.
இந்தியா மொத்தம் நான்கு சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கும். இதில் முதல் போட்டி ஜூன் 5ம் தேதி நடைபெறும். அப்போட்டியில் அயர்லாந்து அணியை இந்தியா சந்திக்கவுள்ளது. ஜூன் 9ம் தேதி பாகிஸ்தான், ஜூன் 12 அமெரிக்கா மற்றும் ஜூன் 15ம் தேதி நடைபெறும் போட்டியில் கனடாவைச் சந்திக்கவுள்ளது இந்தியா.
29 நாட்கள் நடைபெறவுள்ள இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. கரீபிய தீவுகளில் அதாவது மேற்கு இந்தியத் தீவுகளில் 6 இடங்களிலும், அமெரிக்காவில் 3 இடங்களிலும் போட்டிகள் நடைபெறும். ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

அமெரிக்காவில் நியூயார்க், டல்லாஸ், லாடர்ஹில் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும். மேற்கு இந்தியத் தீவுகளின் ஆறு மைதானங்களில் 41 போட்டிகள் நடைபெறவுள்ளன. அரை இறுதிப் போட்டி டிரினிடாட் டொபோகா மற்றும் கயானாவில் நடைபெறும். இறுதிப் போட்டி பார்படாஸில் ஜூன் 29ம் தேதி நடைபெறும்.
ஜூன் 1ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் அமெரிக்காவும், கனடாவும் மோதவுள்ளன. ஜூன் 2ம் தேதி நடைபெறும் 2வது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், பாபுவா நியூ கினியாவும் மோதும்.
மொத்தம் நான்கு குரூப்களாக 20 அணிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் இடம் பெறும். அதில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் சூப்பர் எட்டு சுற்றுக்குத் தகுதி பெறும். அதில் வெற்றி பெறும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அணிகள் மற்றும் பிரிவுகள் விவரம்:
ஏ பிரிவு - இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா.
பி பிரிவு - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்.
சி பிரிவு - நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா, மேற்கு இந்தியத் தீவுகள்
டி பிரிவு - தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}