அமெரிக்காவில் மோதப் போகும் இந்தியா - பாகிஸ்தான்.. கோடிக்கணக்கில் விற்பனையாகும் டிக்கெட்கள்!

Mar 04, 2024,06:13 PM IST
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ள  இந்தியா  - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டிக்கான  டிக்கெட்டுகள் ரூ.1.86 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றனவாம்.

2024 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. அமெரிக்கா, ஸ்காட்லாந்து, பப்புவா நியூகினியா,  கனடா, நோபாளம், ஓமன்,  நமீபியா, உகாண்டா,  வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து  ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.



இந்நிலையில்,  இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தயா  vs பாகிஸ்தான்  மோதும் போட்டி ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான டி20 உலக கோப்பை போட்டியின் டிக்கெட் விலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. உலகளவில் கிரிக்கெட்டில் இந்தியா  vs பாகிஸ்தான் இடையேயான எந்த போட்டியும் ரசிகர்களுக்கு திருவிழா என்று தான் கூறவேண்டும். நீண்ட கால போட்டியாளர்களாக இந்தியாவும் பாகிஸ்தானும் எங்கு சந்தித்தாலும் அந்த மைதானம் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களால் நிரம்பி வழியும்.

அப்படித்தான் ஜூன் 9ம் தேதி  நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் இந்தியா  vs பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன போட்டிக்கு டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி வருகின்றனர். டிக்கெட்டுகளுக்கு முழு கிராக்கி ஏற்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை மறு விற்பனை செய்யும் தளங்கள் சாதாரண டிக்கெட்டின் விலையாக அதிகபட்ச டிக்கெட் விலை சுமார் ரூ.40,000 ஆக இருந்த நிலையில், அதை வாங்கி மறுவிற்பனை செய்யும் இணையதளங்களில் ரூ.40 லட்சம் முதல் வசூல் செய்கின்றன. 

ஒரு விஐபி டிக்கெட்டின் விலை ரூபாய் 1.4 கோடியாக நிர்ணயம் செய்துள்ளது.  அதுமட்டுமின்றி கூடுதல் கட்டணம் ரூபாய் 40 லட்சம் சேர்த்து மொத்தம் டிக்கெட் விலை ரூபாய் 1.86 கோடியாக நிர்ணயித்துள்ளது.இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்