சந்திரனை மட்டுமல்ல.. சூரியனையும் தொடப் போறோம்.. தமிழிசை பெருமிதம்

Aug 31, 2023,08:44 AM IST
ஹைதராபாத்: நாம் சந்திரனை மட்டுமல்ல.. சூரியனையும் கூட தொடப் போகிறோம். வரும் காலத்தில் சந்திரனிலும் கூட நாம் ரக்ஷா பந்தன் கொண்டாட முடியும் என்று தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் ரக்ஷா பந்தன் விழா நடைபெற்றது. அதில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிலவை மட்டுமல்ல, நாம் சூரியனையும் கூட அடையப் போகிறோம்.  நிலவிலும் கூட போய் நாம் ரக்ஷா பந்தனை எதிர்காலத்தில் கொண்டாடுவோம்.  நமது பாரதத் தாயின் புதல்வர்கள் குறித்து நாம் பெருமைப்படுகிறோம்.  இன்று நாம் இங்கு இந்த பூமியில் ரக்ஷா பந்தனைக் கொண்டாடுகிறோம். நாளை நிலவிலும் இதைக் கொண்டாடுவோம்.



\நமது விண்வெளி விஞ்ஞானிகளால் நாடு பெருமை அடைந்துள்ளது. நாம் பெருமை அடைந்துள்ளோம்.  இந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்த பிரதமருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நமது விஞ்ஞானிகள் மிகச் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நமது நாட்டில் பல மாநிலங்கள் உள்ளன,  பல மொழிகள் உள்ளன. பழக்க வழக்கங்கள் பல உள்ளன. கலாச்சார வேறுபாடு உள்ளது. இப்படிப்பட்ட நாட்டில்நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பது பெருமையானது.  அதுதான் ரக்ஷா பந்தன் விழாவின் முக்கிய அம்சமாகும் என்றார் தமிழிசை

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்