சென்னை : இந்தியன் 2 படம் ரிலீசை முன்னிட்டு, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு டீசர் என வெளியிட்டு, சோஷியல் மீடியாவை அலற விட்டு வருகிறது இந்தியன் 2 டீம் மற்றும் லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம்.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு உருவாகி, ரிலீசிற்கு தயாராகி உள்ளது இந்தியன் 2 படம். கமல்ஹாசன், சித்தார்த், பாபி சின்ஹா, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் இந்தியன் 2 பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு, பல பிரச்சனைகளை தாண்டி ஜூலை 12ம் தேதி ரிலீசாக உள்ளது.

1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்து வெளியாகி சூப்பர்ஹிட்டான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது இந்தியன் 2.
லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரித்து, வெளியிட உள்ளது. படத்தின் நீளம் கருதி இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது இந்தியன் 2 ஜூலை 12ம் தேதியும், அடுத்த பாகம் இந்தியன் 3 என்ற பெயரில் 2025ம் ஆண்டும் வெளியிடப்பட உள்ளது. கிட்டதட்ட ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தின் ரிலீசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் ஓபனான சில மணி நேரங்களிலேயே டிக்கெட்கள் அனைத்தும் புக் ஆகி விட்டன. ஜூலை 14 வரை ஐமேக்ஸ் திரைகளில் டிக்கெட்கள் எதுவும் காலி இல்லை.
இந்தியன் 2 ரிலீசை முன்னிட்டு நேற்று பிடிஎஸ் வீடியோவை வெளியிட்ட லைகா புரொடக்ஷன்ஸ், இன்று காலை முதல் 2 மணி நேரத்திற்கு ஒரு க்ளிம்ஸ் என வெளியிட்டு வருகிறது. காலையில் இந்தியன் 2 படத்தின் டிக்கெட் புக்கிங் ஓப்பனானதை தெரிவிக்கும் வகையில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் பேசிக் கொள்ளும் ஒரு க்ளிம்சை படக்குழு வெளியிட்டது. இது வெளியிட்ட 2 மணி நேரத்திலேயே போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பாபி சின்ஹா, சேனாபதியின் வர்மகலை குறித்தும், அவரின் வீரம் குறித்து பேசும் அடுத்த க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவின் துவக்கத்தில், அருகில் இருப்பவர், அவர் வயதானவர் சார் என சொல்ல, அதற்கு பதில் கூறும் பாபி சின்ஹா, 118 வயது கும்ஃபூ மாஸ்டர் ஒருவரின் வீடியோவை காட்டி, வயசானவரா அவரு என கேட்டு, சேனாதிபதி பற்றி விளக்குகிறார். இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் அடுத்தடுத்து வெளியிட்டு வரும் வீடியோ, இந்தியன் 2 டிக்கெட் புக்கிங் ஓபனிங் ஆகியவற்றால் எக்ஸ் தளத்தில் #Indian2 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி உள்ளது. இதை பலரும் டேக் செய்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}