சென்னை: இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தியன் 2 படமும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்ற ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று இந்தியன் 2 திரைப்படம் உலகமெங்கும் வெளியா பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது. ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்
1996 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்தது. இதில் கமலின் மாஸ் கெட்டப் இப்போது வரை ரசிகர்கள் வியந்து பார்த்து ரசித்து வருகின்றனர்.
இவருடன் மனிஷா கொய்ராலா, சுகன்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 28 வருடம் கழித்து மீண்டும் இந்தியன் 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் திரைக்கதையை எழுதி இயக்கி உள்ளார். இதில் கமல்ஹாசன், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இந்தியன் 2 இன்று வெளியானது. நேற்று இரவே சில நாடுகளில் படம் வெளியாகி விட்டது. அமெரிக்காவில் நம்ம ஊர் நேரப்படி இன்று இரவு வெளியாகவுள்ளது. படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்களே வெளியாகி வருகின்றன. குறிப்பாக முதல் பாதியில் படம் கலக்கலாக உள்ளதாக பலரும் கூறியுள்ளனர். கமல்ஹாசனின் அறிமுகக் காட்சிகள் அசத்தலாக உள்ளதாக பலரும் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் ஷோ திரையிடப்பட்டது. வெளிநாடு மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இப்படம் அதிகாலையிலேயே வெளியானது. ரசிகர்கள் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்று வருகின்றனர். இந்தியன் முதல் பாகம் போல இந்தியன் 2ம் வசூல் மற்றும் வரவேற்பில் சாதனை படைக்குமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}