உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!

Nov 04, 2025,05:54 PM IST

மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.


மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில்  நடந்தது. இதில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது, தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.


50 ஆண்டுகளுக்கு பின்னர் மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.51 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்தது. அதுமட்டுமின்றி சாம்பியனான இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.5 கோடி வழங்கப்பட்டது.




இந்த போட்டியில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தீப்தி சர்மா சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 212 ரன்கள் குவித்ததுடன், 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய தீப்தி சர்மா, தொடர் நாயகி விருதையும் வென்றார்.

 

இதனை தொடர்ந்து, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் "திறமைமிகு வீரர்" திட்டத்தின் கீழ், தீப்தி சர்மாவுக்குக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவியை வழங்கி சிறப்பிக்க போவதாக அம்மநில காவல்துறை தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்

news

அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்

news

தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!

news

அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!

news

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6

news

ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!

news

டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு

அதிகம் பார்க்கும் செய்திகள்