டெல்லி: இந்தியப் பொருளாதாரம் செத்து விட்டது. ஏற்கனவே செத்துப் போய் விட்ட ரஷ்ய பொருளாதாரத்துடன் சேர்ந்து இந்தியப் பொருளாதாரம் இன்னும் நாசமாகட்டும் என்று சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அது உண்மையா ஒன்று Fact check செய்து பார்த்தோம்.. அதுவும் டிரம்ப் ஆட்சி நடந்து வரும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முக்கியமான 3 ஏஐ தளங்களில்.. என்ன ஆச்சரியம்.. அதில் வந்த பதில்கள் அதிர வைப்பதாக உள்ளன.
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருகிறது. இந்தியாவின் தேவைக்கு எங்கு வேண்டுமானாலும் அது வாங்க முடியும். அது இந்தியாவின் உரிமையும் ஆகும். ஆனால் இந்த வர்த்தகத்தை நிறுத்துமாறு அமெரிக்கா கட்டாயப்படுத்தி வந்தது. இதை இந்தியா பொருட்படுத்தவில்லை. இதையடுத்து இந்தியாவை மிரட்ட ஆரம்பித்தார் அதிபர் டிரம்ப்.
ரஷ்யாவுடனான வர்த்தக உறவை கைவிடாவிட்டால் அதிக அளவில் வரி விதிக்கப்படும் என்று கூறினார் டிரம்ப். அதன்படி தற்போது 25 சதவீத வரியை அவர் விதித்துள்ளார். அத்தோடு நின்றாலும் பரவாயில்லை. இந்தியாவின் பொருளாதாரம் செத்துப் போய் விட்டதாகவும் விமர்சித்தார் டிரம்ப். இது இந்தியாவில் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
சரி டிரம்ப் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையிலேயே இந்தியாவின் பொருளாதாரம் அப்படித்தான் இருக்கிறதா என்பதை அறிய ஒரு வேலையைச் செய்தோம். அதாவது அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட ஏஐ தளங்களிடமே இந்தக் கேள்வியை முன்வைத்தோம். என்ன ஆச்சரியம்.. சொல்லி வைத்தாற் போல ஒவ்வொரு தளமும் இந்தியாவின் பொருளாதாரத்தை வாயாரப் புகழ்ந்து தள்ளி விட்டன. வந்த ஒவ்வொரு பதிலும் இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மிக வலுவான பொருளாதாரம் என்றும் பாராட்டியுள்ளன.
கூகுள் ஜெமினியிடம் கேட்டபோது அது கொடுத்த பதில்:
மெட்டா ஏஐ தளத்தில் கேட்டபோது அது தந்த பதில் இது:
சேட்ஜிபிடி கொடுத்த விளக்கம் இது:
ஆக மொத்தம், அமெரிக்க அதிபர் சொல்லியுள்ளதற்கு நேர் மாறாக அமெரிக்காவில், அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட ஏ ஐ தளங்கள் தலையில் குட்டுவது போல சாலிடான பதிலைச் சொல்லியுள்ளன. இந்தியா சர்வதேச அளவில் 4வது பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது. விரைவில் அது 3வது பெரிய பொருளாதார சக்தியாக உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சாதாரண வர்த்தக விவகாரத்துக்காக இந்தியாவின் பொருளாதாரத்தை இகழ்ந்து பேசியுள்ளார் அதிபர் டிரம்ப். அவரது பேச்சுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?
{{comments.comment}}