சென்னை: ஆஸ்திரேலியாவை எப்படி வச்ச செய்யப் போகிறது என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதப் போகின்றன. இதை கிட்டத்தட்ட ஒரு போர் போலவே தீவிர இந்திய ரசிகர்கள் பார்க்கிறார்கள். இதுவே பாகிஸ்தானாக இருந்திருந்தால் இது போர்தான் என்றே டிக்ளேர் செய்திருப்பார்கள்.. ஆனால் ஆஸ்திரேலியாவை வெல்வதையும் கூட இந்தியர்கள் எப்போதுமே கெத்தாகத்தான் பார்ப்பார்கள்.
காரணம், பாகிஸ்தான் நமக்கு பரம்பரை எதிரி என்றால், ஆஸ்திரேலியா நமக்கு இனவெறி எதிரி. ஆஸ்திரேலியர்கள், எதிரணியினரை எப்படியெல்லாம் கேலி கிண்டல் செய்வார்கள் என்பது உலகம் அறிந்தது. அதிலும் நடப்பு உலக்க கோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திப்பது மிக நீண்ட காலத்துக்குப் பிறகு வந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவை வெல்வதை ரொம்ப ஸ்பெஷலாக இந்தியா பார்க்கிறது. அதற்கு ஒரு காரணம் உள்ளது.

2006ம் ஆண்டு இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற்றது. அப்போது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வென்றது. அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் சரத் பவார். ஆஸ்திரேலியா கேப்டனாக இருந்தவர் சரத் பவார்.
வெற்றிக் கோப்பையை சரத் பவார் வழங்கினார். சரத் பவார் கோப்பையை வழங்கும்போது அவரை ஆஸ்திரேலிய அணியினர் அவமதித்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்தது. கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சரத் பவார் நின்றிருந்தபோது, அவரது முதுகில் தட்டி, அவரை நோக்கி விரலைச் சுண்டி கோப்பையைத் தருமாறு முதலில் ரிக்கி பான்டிங் கூறினார். இது சரத் பவாரை அதிர்ச்சி அடைய வைத்தது. அத்தோடு நிற்கவில்லை, பிற வீரர்கள், சரத் பவார் முதுகில் வைத்து வெளியே போங்கள் என்று தள்ளினர். இதுவும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வருகின்றனர் இந்திய ரசிகர்கள். ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க இதுதான் சரியான வாய்ப்பு. இப்படி ஒரு அவமதிப்பு மீண்டும் இந்தியாவுக்கு நேராமல் தடுக்க ஆஸ்திரேலியாவை படு தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று பலரும் ஆவேசமாக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை பாகிஸ்தானை வீழ்த்தினால் அதைத் திருவிழா போல கொண்டாடுவார்கள். அதே உணர்வைத்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்போதும் இந்தியர்கள் கொண்டாடுவார்கள். அந்த வகையில் நாளைய இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எப்படி வச்சு செய்யப் போகிறது என்பதை காண இப்போதே ஆவலுடன் தயாராகி விட்டார்கள் ரசிகர்கள்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}