துபாய்: எங்கு போனாலும் நம்மில் சிலருக்கு சில பழக்கங்களை மாற்றிக் கொள்ளவே முடியாது.. குறிப்பாக அம்மாக்களுக்கு. அப்படிப்பட்ட ஒரு அம்மா செய்த செயல் செம கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களைப் பொறுத்தவரை நம்முடைய சமுதாயம் பல துறைகளில் அவர்களுக்கு நிம்மதி பெருமூச்சைக் கொடுத்திருந்தாலும்ம கூட இந்த துணி துவைப்பது, சமையல் செய்வது ஆகியவற்றிலிருந்து இன்னும் விடுவிக்கவே இல்லை. குறிப்பாக நம்ம வீட்டு தாய்மார்கள் இன்னும் கிச்சனை விட்டும், துவைக்கும் பாத்ரூமை விட்டும் வெளியே வர முடியாமல்தான் தவிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அம்மாக்களில் ஒருவர், துபாய்க்கு போயிருந்த இடத்தில் ஸ்டார் ஹோட்டல் பால்கனியில் டிரவுசரை துவைத்து காயப் போடும் வீடியோ வெளியாகி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதி நவீன பாம் அட்லான்டிஸ் ஹோட்டலில்தான் இந்த காட்சி அரங்கேறியுள்ளது. அந்த ஹோட்டலில் தங்கியிருந்த இந்தியப் பெண்மணி ஒருவர் தான் துவைத்த துணியை பால்கனியில் வெயிலில் காயப் போடுகிறார். இந்த வீடியோவை பல்லவி வெங்கடேஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார். அவரது தாயார்தான் துணியைக் காயப் போட்டவர்.
இவர் மட்டுமல்ல, தூரத்தில் இன்னொரு அறையின் பால்கனியிலும் இதுபோல துணி காயப் போடப்பட்டிருந்ததையும் அவர் வீடியோவில் எடுத்துள்ளார். அவரும் இந்தியரா என்று தெரியவில்லை. அம்மாக்கள் எப்போதும் அம்மாக்கள்தான் என்றும் பல்லவி வெங்கடேஷ் ஜாலியான கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோவுக்கு பாம் அட்லான்டிஸ் ஹோட்டல் நிர்வாகமும் ஸ்மைலி போட்டு பாராட்டி வரவேற்றுள்ளது. கூடவே, எங்களுடைய ஹோட்டலில் உங்களது ஸ்டேவை நன்றாக அனுபவிக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி. ஹோட்டல் பாத்ரூமிலேயே துணி காயப் போடும் டிரையிங் கொடியும் இருக்கிறது. அதிலேயே கூட நீங்க போட்டுக்கலாம் என்றும் கூறியுள்ளது ஹோட்டல் நிர்வாகம்.
என்ன சொல்லுங்க.. மொட்டை மாடிக்குப் போய் காயும் வெயிலில் துணியை உதறிப் போட்டு, கிளிப்பை மாட்டி விட்டு வந்தாதான் நமக்கெல்லாம் துணியைக் காய வச்ச மாதிரி இருக்கும். அதைத்தான் நம்ம பல்லவியோட அம்மாவும் செஞ்சிருக்காங்க.. செமல்ல!
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}