அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!

Jul 12, 2025,05:24 PM IST

டெல்லி: வெளிநாட்டில் வசிக்கும் ஒரு இந்தியத் தம்பதி, தங்களிடம் ரூ. 25 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாகவும், இதை வைத்துக் கொண்டு இந்தியாவில் செட்டிலாக முடியுமா, ஓய்வுக் காலத்தைக் கழிக்க இந்தப் பணம் போதுமா என்று கேட்டிருப்பது விவாதத்தையும் கலகலப்பானை ஆலோசனைகளையும் கிளப்பியுள்ளது.


வெளிநாட்டில் சிறப்பான வாழ்க்கைத் தேடிப் பயணிக்கும் கனவு, எண்ணற்ற இந்தியர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. ஆனால், அங்கு போன இந்தியர்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது தெரியுமா.. எப்படியாவது திரும்ப இந்தியாவுக்கே போய் செட்டிலாகி விட வேண்டும் என்பதுதான். 




இந்த நிலையில், அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஓர் இளம் இந்தியத் தம்பதி, இந்தியா திரும்புவது குறித்து 'ரெடிட்' சமூக வலைத்தளத்தில் ஆலோசனை கேட்டு கலகலப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்தத் தம்பதிக்கு வயது 30களில் இருக்கும். ஒரு குழந்தை இருக்கிறதாம். இந்தத் தம்பதி, இந்தியாவில் மூவரும் வசதியான வாழ்வு வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கேட்டுள்ளனர்.


அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையிலும், நாட்டிலும் நிலவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புவது குறித்து தாங்கள் சிந்திப்பதாக அத்தம்பதி பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவுக்குத் திரும்பி ஓய்வுபெற எவ்வளவு பணம் தேவைப்படும்?. நாங்கள் எங்கள் 30களின் நடுப்பகுதியில் இருக்கிறோம். எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறோம். இங்கு தொழில்நுட்பத் துறையிலும், நாட்டிலும் நடக்கும் சில காரணங்களால், இந்தியாவுக்குத் திரும்பலாமா என யோசித்து வருகிறோம்.


நாங்கள் சிறிது காலம் ஓய்வெடுத்துக்கொண்டு, பிறகு எங்கள் விருப்பத்திற்கேற்ப வேலை தேடுவோம். ஆனால், அது எங்கள் வாழ்க்கையை முழுமையாக ஆட்கொள்ளக் கூடாது என விரும்புகிறோம். எனவே, இந்தியாவில் முன்கூட்டியே ஓய்வுபெற்று, ஒரு குழந்தையுடன் வசதியான வாழ்க்கையை வாழ எவ்வளவு பணம் தேவைப்படும்? என்று அவர்கள் கேட்டுள்ளனர். மேலும் தங்களிடம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 25 கோடி சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.  இந்தத் தம்பதி இந்தியக் குடிமக்களாகவே உள்ளனர். ஆனால் குழந்தை அமெரிக்க குடிமகனாம். 


இவர்களின் பதிவுக்கு பலரும் சுவாரஸ்யமான பதிலைக் கொடுத்து வருகின்றனர். ஆலோசனைகளும் குவிந்து கொண்டுள்ளனவாம்.


அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் இந்தியா திரும்புவது குறித்த விவாதம் அதிகரித்து வரும் நிலையில், இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்