லண்டன்: லண்டனில் ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 16 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேன்ட்ஸ், சான்ட்வெல் பகுதியைச் சேர்ந்தவர் முகான் சிங். 39 வயதாகும் இவர் கடந்த 2021ம் ஆண்டு பிர்மிங்காமிலிருந்து லண்டன் வந்த ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் பயணித்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தார்.
இதையடுத்து அந்தப் பெண் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அதன் பேரில் லீமிங்டன் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது போலீஸார் முகான் சிங்கைக் கைது செய்தனர். அவர் மீது பின்னர் வார்விக் கிரவுன் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு 16 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 7 வருடங்கள் அவரைக் கண்காணிப்புப் பட்டியலிலும் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}