அமெரிக்காவில் குடும்பச் சண்டையில் விபரீதம்.. 3 பேருக்கு ஏற்பட்ட கதி.. பரபரப்பு சம்பவம்!

Jan 24, 2026,02:14 PM IST

ஜார்ஜியா: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், குடும்பத் தகராறு காரணமாக இந்திய வம்சாவளிப் பெண் மற்றும் அவரது உறவினர்கள் மூவரை அவரது கணவரே சுட்டுக்கொன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாக்குவாதத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தனது மனைவி மற்றும் அங்கிருந்த மூன்று உறவினர்களைத் துப்பாக்கியால் சுட்டார்.


இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியப் பெண் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.




இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு இவ்வளவு பெரிய உயிரிழப்பில் முடிந்தது அப்பகுதி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.


இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ள அட்லாண்டாவிலுள்ள இந்தியத் தூதரகம், குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் தூதரகம் வெளியிட்ட பதிவில், குடும்பத் தகராறு காரணமாக நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தத் துயரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், இந்தியக் குடிமகன் ஒருவரும் பலியாகியிருப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் விரிவாக வழங்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் விஜய்குமார் (51) என்று தெரிய வந்துள்ளது. இறந்தவர்களின் பெயர்கள் விஜய்குமாரின் மனைவி மீமு டோக்ரா (43), உறவினர்கள் கெளரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரீஷ் சந்தர் (38) ஆகியோர் ஆவர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வீட்டின் வாசலில் நின்றாலும்.. வானம் வரை நீளும் கனவுகள்!

news

கைகள் மெலிந்தாலும், கனவுகள் வலிமை கொண்டவை.. பெண் குழந்தைகள்!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

அமெரிக்காவில் குடும்பச் சண்டையில் விபரீதம்.. 3 பேருக்கு ஏற்பட்ட கதி.. பரபரப்பு சம்பவம்!

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்