காபூல்: மாஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் படாக்ஷான் பகுதியில் உள்ள டாப்கானா மலைப் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குளாகியுள்ளதாக தலிபான்கள் அரசு உறுதி செய்துள்ளது.
இந்த விமானம் இந்தியாவிலிருந்து போன விமானம் என்று முதலில் ஆப்கானிஸ்தானிலிருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதை தற்போது இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவீட்டில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளாகியுள்ள விமானம் இந்தியாவின் ஷெட்யூல்ட் விமானமோ அல்லது இந்தியாவிலிருந்து அமர்த்தப்பட்ட வாடகை விமானமோ அல்ல. அது மொராக்கோவில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானமாகும். மேல் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். உயிர்ப்பலி குறித்து இதுவரை தெரியவில்லை. கரன், மஞ்சான், ஜிபக் ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் இந்த டாப்கானா மலைப் பகுதி உள்ளது. இங்குள்ள வாகா என்ற பிராந்தியத்தின் மீது விமானம் பறந்துகொண்டிருந்தபோதுதான் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீட்புப் படையினர் விபத்துக்குள்ளான பகுதிக்குச் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்த பிறகுதான் உயிர்ப்பலி உள்ளிட்டவை குறித்துத் தெரிய வரும்.
இதற்கிடையே, விபத்தில் சிக்கிய விமானம், வாடகைக்கு அமர்த்தப்பட்ட சார்ட்டர்ட் விமானம் என்று தெரிய வந்துள்ளது. அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இந்த விமானத்தில் யார் பயணித்தார்கள் என்ற விவரமும் தெரியவில்லை.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}