டெல்லி: இந்திய கால்பந்து அணியின் ஜாம்பவான் சுனில் செட்ரி, கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குவைத் அணியுடன் தான் ஆடும் போட்டியே கடைசிப் போட்டியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ செய்தி மூலம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் சுனில் செட்ரி. இந்தியாவின் மிகச் சிறந்த கால்பந்து சூப்பர் ஸ்டார்களில் சுனில் செட்ரிக்கு முக்கிய இடம் உண்டு. குவைத்துடன் இந்தியா பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி தகுதி ஆட்டத்தில் மோதவுள்ளது. அத்துடன் கால்பந்திலிருந்து விடைபெறுவதாக செட்ரி அறிவித்துள்ளார். கொல்கத்தாவின் சால்ட்லேக் மைதானத்தில் ஜூன் 6ம் தேதி இப்போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் கத்தார் உள்ளது.

ஓய்வு குறித்து செட்ரி கூறுகையில், இதுதான் எனது கடைசிப் போட்டி என்று எனது குடும்பத்திடம் எனது முடிவைத் தெரிவித்து விட்டேன். அப்பா இயல்பாக இருந்தார். அவருக்கு மகிழ்ச்சிதான்.. நான் அவருடன் நிறைய நேரம் இருக்கமுடியும் என்பதால். எனது மனைவிதான் உடைந்து போய் விட்டார். அது வினோதமாக இருந்தது. அவர் கதறி அழுது விட்டார். எப்போதும் தைரியமாக இருக்கக் கூடியவர் அவர். நான் சோர்வடையவில்லை. சோர்வை உணரவும் இல்லை. அதேசமயம், போதும் என்ற உணர்வு வர ஆரம்பித்து விட்டது. அதனால்தான் இந்த முடிவு.
இந்த முடிவால் நிச்சயம் நான் சோகமாக உணர்வேன். தினசரி அந்த சோகம் வரும். எனது பயிற்சிகளை, எனது விளையாட்டை, எனது சகாக்களை மிஸ் செய்வேன். எனது நாட்டுக்காக நான் ஆட முடியாது என்பது வருத்தம் தருகிறது.
நான் கண்ட பல கனவுகளை நனவாக்கி விட்டேன். எனது நாட்டுக்காக ஆடுவது என்பதை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது. அந்தக் கனவு நனவாகி விட்டது. அது போதும் என்று கூறியுள்ளார் சுனில் செட்ரி.
சுனில் செட்ரி ஓய்வுக்கு பலரும் ஏமாற்றமும் வருத்தமும் தெரிவித்துள்ளனர். ஓய்வு வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையட்டும் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
அருமையான பார்வர்ட் வீரர்
சுனில் செட்ரி அருமையான பார்வர்ட் வீரர். செகந்திராபாத்தில் பிறந்தவரான சுனில் செட்ரிக்கு தற்போது வயது 39. 2001ம் ஆண்டு முதல் அவர் கால்பந்து விளையாடி வருகிறார். இந்திய அணியின் கேப்டனாக திகழும் சுனில் செட்ரி, நாட்டின் முன்னணி கிளப்களான மோகன்பகான், ஜேசிடி, ஈஸ்ட் பெங்கால், டெம்போ உள்ளிட்ட அணிகளுக்காக ஆடியுள்ளார்.
2005ம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஆடி வரும் சுனில் செட்ரி 94 கோல்களை நாட்டுக்காக அடித்துள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}