"நேத்து ராத்திரி நெஞ்சே பிளந்து போச்சு.. பல நாட்களுக்கு மறக்க முடியாது"..  உருகிய அஸ்வின்!

Nov 20, 2023,08:10 PM IST
சென்னை: இந்திய அணி வீரர்களுக்கு நேற்று இரவு நடந்த சம்பவம் நெஞ்சைப் பிளந்து விட்டது. ஆனால் பல காலத்திற்கு மறக்க முடியாத அருமையான அனுபவம் எங்களுக்குக் கிடைத்துள்ளது. அதற்காக அனைத்து இந்திய வீரர்களையும் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின்.

இந்திய அணி நேற்று மிகப் பெரிய போரில் ஈடுபட்டிருந்தது. 140 கோடி இந்தியர்களின் துணையுடன், ஒரு லட்சம் இந்தியர்களின் நேரடி குரல் ஆதரவுடன் களத்தில் குதித்த இந்தியாவை, 11 வீரர்களின் துணையுடன் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி உலகக் கோப்பையைத் தட்டிக் கொண்டு போய் விட்டது.

வெல்ல முடியாத வீரனாக, விவேகத்துடனும், துணிவுடனும், வீறு நடை போட்டு வந்த சிங்கமாக வந்த இந்தியப் புலிகளை, வலிமையான கங்காருகள் தங்களது சாதுரியத்தால் வீழ்த்தியதை யாராலுமே ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் போரில் யாராவது ஒருவருக்குத்தானே வெற்றி கிடைக்கும்.. வென்ற ஆஸ்திரேலியாவை வாழ்த்தி குட்லக் சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டனர் இந்திய ரசிகர்கள்.



ஆஸ்திரேலியாவுக்கு பலரும் வாழ்த்து கூறிய நிலையில் தற்போது சுழற்பந்து வீச்சாளரும், இந்திய அணியின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான ஆர்.அஸ்வினும் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:

நேற்று இரவு அத்தனை பேரின் இதயங்களும் நொறுங்கிப் போய் விட்டன. ஆனால் இந்தத் தொடர் முழுவதும் நமது வீரர்கள் செயல்பட்ட விதத்தால், நாம் பல நாட்களுக்கு மறக்க முடியாத அருமையான அனுபவம் கிடைத்துள்ளது. அதற்காக அனைவருக்கும் பாராட்டுகள். குறிப்பாக விராட் கோலி, முகம்மது ஷமி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோருக்கு சிறப்பான பாராட்டுகள்.

பிறகு, நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழும் ஆஸ்திரேலியாவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் நேற்று மைதானத்தில் விளையாடிய விதம் நம்பவே முடியவில்லை. அவர்களது 6வது உலகக் கோப்பைக்காக அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் ஆர்.அஸ்வின்.

நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே அஸ்வின் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது. பிற போட்டிகளில் அவர் ஆடவில்லை. இறுதிப் போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இறுதிப் போட்டியில் அஸ்வின் இருந்திருந்தால் ஒருவேளை ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்