மும்பை: அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தை குறியீட்டுகுளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆரம்பத்திலேயே சரிவுடன் தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து 12 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,342.23 புள்ளிகள் சரிந்து 78,381.88 புள்ளிகளாக இருந்தது. இது மொத்த வணிகத்தில் 1.47 சதவீதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில், எம்&எம், டெக் மஹிந்திரா, இந்தஸ்இந்த் வங்கி ஆகிய 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டும் உயர்வுடன் உள்ளன. சர்பார்மா, என்டிபிசி, ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட 27 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் உள்ளன.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 451.55 புள்ளிகள் சரிந்து 23,852.80 புள்ளிகளாக இருந்தது. இது மொத்த வணிகத்தில் 1.58 சதவீதம் சரிவாகும். நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் 5 நிறுவனப்பங்குகள் மட்டும் உயர்வுடன் உள்ளன. மற்றவை சரிவில் உள்ளன. இந்த சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறவபுள்ளது. இதில் யார் வெற்றி பெறுவார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதுகுறித்து உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் உலகம் முழுவதும் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. பங்குகளை வாங்க முதலீட்டாளர்களிடையே நிலவும் நம்பிக்கையற்ற சூழலே இந்த பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்தியப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால்தான் பங்குச் சந்தை மீண்டும் உயர்வு பெறும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மாறாக கமலா ஹாரிஸ் வென்றால், இந்தியப் பங்குச் சந்தைக்கு மேலும் பாதகம் ஏற்படலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}