டெல்லி: இந்திய மல்யுத்த நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் தான் வழக்கமாக போட்டியிடும் 53 கிலோ எடைப் பிரிவிலிருந்து 50 கிலோ பிரிவுக்கு மாறக் காரணமான, சக இந்திய வீராங்கனை ஆன்டிம் பாங்கல், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக பாரீஸை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளார். ஆன்டிம் பாங்கலின் செயலால் இந்தியாவுக்கு தலைக்குணிவு ஏற்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த அணியில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டு நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தி வருகிறது. முதலில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இப்போது இன்னொரு வீராங்கனையான ஆன்டிம் பாங்கல், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் விதிமுறைகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டு ஒழுங்கீனமாக செயல்பட்டதற்காக பாரீஸை விட்டு வெளியேற்றப்படுகிறார்.
ஆன்டிம் பாங்கல் செய்ததை பிறகு பார்க்கலாம்.. இவருக்கும் வினேஷ் போகத்துக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. அதுவும் இங்கு முக்கியமானது. வழக்கமாக வினேஷ் போகத் 53 கிலோ எடைப் பிரிவில்தான் போட்டியில் பங்கேற்பார். ஆனால் இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் அந்த இடத்திற்கு ஆன்டிம் பாங்கலை இந்திய ஒலிம்பிக் சங்கம் அலாட் செய்தது. இதனால் வினேஷ் போகத், 50 கிலோ எடைப் பிரிவுக்கு மாற நேரிட்டதாக கூறுகிறார்கள். இருப்பினும் இந்த சவாலை ஏற்று உடல் எடையைக் குறைத்துத்தான் வினேஷ் போகத் போட்டியில் பங்கேற்றார். ஆனால் கடைசி போட்டிக்கு முன்னதாக அவரால் எடையைக் குறைக்க முடியாமல் போய் 100 கிராம் எடை கூடுதலாக இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.
இப்போது ஆன்டிம் பாங்கல் செய்த செயலுக்கு வரலாம். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள் உரிய அனுமதியுடன்தான் ஒலிம்பிக் கிராமத்திற்குள் நடமாட முடியும். அனுமதி இல்லாத யாரும் உள்ளே போக முடியாது. அப்படி இருக்கும்போது, தனது முதல் போட்டியிலேயே தோல்வியடைந்த ஆன்டிம் பாங்கல், தனது பயிற்சியாளர்கள் பகத்சிங், விகாஸ் ஆகியோர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றார். அந்த இரு பயிற்சியாளர்களும் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது. பின்னர் தனது சகோதரி நிஷாவை அழைத்து தனது அடையாள அட்டை உள்ளிட்டவற்றைக் கொடுத்து, ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள தனது அறையில் உள்ள தனது பொருட்களை எடுத்து வருமாறு கூறியுள்ளார் ஆன்டிம் பாங்கல்.
ஆன்டிம் பாங்கலின் தங்கையும் உள்ளே சென்று பொருட்களை எடுத்து விட்டுத் திரும்பியுள்ளார். போகும்போது யார் கண்ணிலும் சிக்காத அவர் வரும்போது போலீஸாரின் சோதனையில் மாட்டிக் கொண்டார். இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட இது ஆள் மாறாட்டம் போன்ற செயல் என்பதால் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆன்டிம் பாங்கலும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு அவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிகிறது. ஆன்டிம் பாங்கலுக்கு அளிக்கப்பட்ட அக்ரடிஷன் கார்டும் ரத்து செய்யப்பட்டது.
அத்தோடு ஆன்டிம் பாங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் உள்ளிட்ட மொத்தக் குழுவினரும் பாரீஸை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சிச் செய்தியாக வந்துள்ளது. ஆன்டிம் பாங்கல் தான் கலந்து கொண்ட முதல் போட்டியில் வெறும் 101 விநாடிகளில் அவர் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்தவித சவாலும் இல்லாமல் ஆன்டிம் பாங்கலை துருக்கி வீராங்கனை தோற்கடித்து இந்திய வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்தார்.
இந்த ஸ்லாட்டை வினேஷுக்கு ஒதுக்கியிருந்தால், இதில் அவர் கலந்து கொண்டிருந்தால் வரலாறு வேறு விதமாக போயிருக்கும். ஆன்டிம் பாங்கலுக்கு இந்த ஸ்லாட் கொடுக்கப்பட்ட காரணத்தால்தான், வேறு வழியில்லாமல் 50 கிலோ பிரிவுக்கு வினேஷ் மாற நேரிட்டது. உடல் எடையையும் கஷ்டப்பட்டு குறைக்க நேரிட்டு கடைசியில் குழப்பமாகி தகுதி நீக்கத்தில் போய் அது முடிந்துள்ளது என்பது வேதனையான விஷயமாகும்.
ஆன்டிம் பாங்கலாவது போட்டியில் வென்று ஆறுதல் அளித்திருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை. அதை விட துயரமாக, ஒழுங்கீனமாக நடந்து கொண்டு நாட்டின் பெயருக்கும் குந்தகம் விளைவித்திருக்கிறார்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}