அதிகரித்த "லொக் லொக்".. திக் திக் முடிவுகள்..  இந்தியர்களுக்கு கொரோனா விட்டு சென்ற தடம் இது தான்!

Feb 19, 2024,04:52 PM IST

மும்பை : உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு. இதற்கு காரணம் இந்தியாவின் தட்பவெப்ப நிலை, இந்தியர்களின் உணவு பழக்க வழக்கம் என ரொம்பவே பெருமைப்பட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் உண்மையில் கொரோனாவால் இந்தியர்களுக்கு என்ன கிடைத்துள்ளது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று புட்டு புட்டு வைத்துள்ளது.


வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் சார்பில் கொரோனாவிற்கு பிறகு இந்தியர்களின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில், கொரோனாவில் இருந்து மீண்டு வந்த இந்தியர்களின் நுரையீரல் செயல்பாடுகளில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நுரையீரல் பாதிப்பானது நீண்ட காலம் இருக்கக் கூடியது என்றும் தெரிய வந்துள்ளது. 




ஐரோப்பியர்கள் மற்றும் சீனர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களே நுரையீரல் செயல்பாடு பாதிப்பிற்கு அதிகம் ஆளாகி உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒரு சிலர் மட்டுமே ஓரிரு ஆண்டுகளில் இந்த நுரையீரல் பாதிப்பில் இருந்து மீளலாம் என்றும், மற்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இந்த பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 


கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம், சிகிச்சை முடிந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு நுரையீரல் தொடர்பான முழு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. 6 நிமிடங்கள் தொடர்ந்து நடக்க வைத்து, ரத்த பரிசோதனைகள், மூச்சு பரிசோதனைகள் என பல பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் லேசாக பாதிக்கப்பட்டனர், சுமாராக பாதிக்கப்பட்டவர்கள், மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. 


இதில் மிக நுட்பமாக நுரையீரல் செயல்பாடு பரிசோதனையான DLCO ஆக்சிஜன் கடத்தும் திறன், ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் செயல்பாடு உள்ளிட்டவைகளை கண்டறியக் கூடியதாகும். இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44 சதவீதம் பேருக்கு ரத்தத்தில் ஆக்சிஜனை கடத்தும் திறன் குறைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 35 சதவீதம் பேர் குறிப்பிட்ட அளவில் நுரையீரல் பாதிப்பை பெற்றுள்ளனர். 8.3 சதவீதம் பேர் நுரையீரலில் ஆக்சிஜன் உட் செல்வதும், காற்று வெளியேறவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. 


கொரோனாவால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல கொரோனாவிற்கு இந்தியர்கள் பலர் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 95 சதவீதம் இந்தியர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்