இதுக்கு ரூ.5000 கோடி செலவு செய்திருக்கிறார்களா?... டாஸ்மாக்கிற்கே டஃப் கொடுக்குறாங்களே!

Aug 02, 2023,09:52 AM IST
டெல்லி : இந்தியர்கள் கடந்த 6 மாதங்களில் கார்கள், ஐபோன்கள் வாங்குவதையும் தாண்டி அழகு சாதனப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை Kantar Worldpanel ன் முதல் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய காஸ்மெடிக் பிரிவில் மட்டும், லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், ஐலைனர் என 100 மில்லியனுக்கும் அதிகமான அழகு சாதன பொருட்களை இந்தியாவில் டாப் 10 நகரங்களில் உள்ள இந்தியர்கள் வாங்கி உள்ளனராம். இவற்றின் மதிப்பு ரூ.5000 கோடியை விட அதிகமாம். இவற்றில் 40 சதவீதம் பொருட்கள் ஆன்லைன் மூலமாக மட்டும் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



வேலைக்கு செல்லும் பெண்களே ஆன்லைன், ஆஃப் லைன் என இரண்டிலும் அதிகமாக வாங்கி உள்ளதாக தெரிகிறது. ஒட்டுமொத்தமாக வாங்கப்பட்ட அழகு சாதன பொருட்களில் பெண்கள் வாங்கியது மட்டும் 1.6 மடங்கு அதிகமாம். ஏற்கனவே  அழகு சாதனை பொருட்களை அதிக வாங்குவதில் ஆசியர்கள் தான் முதலிடத்தில் இருந்து வருகிறார்கள். அதிலும் தென் கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் வாங்கி வருகிறார்கள். 

கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் உதட்டிற்கு உபயோகிக்கும் அழகு சாதன பொருட்கள் மட்டும் 38 சதவீதம் விற்பனையாகி உள்ளதாம். இதற்கு அடுத்த படியாக நெயில் பாலிஷ் தான் அதிகம் வாங்கப்பட்டுள்ளது. தற்போது அதிகமான பிராண்டுகள் மார்கெட்களில் விற்பனைக்கு வந்துள்ளதால் அவற்றின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த அழகு சாதன பொருட்கள் விற்பனையிலும் சோஷியல் மீடியாவின் பங்கு அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

புதிய மாடல் கார்கள், பைக்குகள், ஐபோன்கள் ஆகியவற்றின் விற்பனையையும், மதுபான விற்பனையையும் அழகு சாதன பொருட்களின் விற்பனை தூக்கி சாப்பிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தங்களை அழகுபடுத்திக் கொள்ள பெண்களுக்கு இணையாக ஆண்களும் களமிறங்கி விட்டதும் இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்