சென்னை: 2025ம் ஆண்டு பிறந்து விட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் புது வருடத்தை வெகு உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
2024ம் ஆண்டு பல சோகங்களையும், கஷ்டங்களையும் கொடுத்து விட்டு ஒரு வழியாக விடை பெற்று விட்டது. புதிய ஆண்டுக்காக மக்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் சரியாக 12 மணிக்கு 2025ம் ஆண்டு பிறந்தது. இந்த வருடம் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்ற வேட்கையுடன் காத்திருக்கும் மக்கள் உற்சாகமாக புது வருடத்தை வரவேற்றுள்ளனர்.
இந்தியா முழுவதும் நகரங்கள் அனைத்திலும் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து நகரங்களிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் மக்கள் புது வருடத்தை வரவேற்றனர்.

தமிழ்நாட்டிலும் புது வருடம் வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. சென்னையில் மெரீனா, பெசன்ட், திருவான்மியூர் என அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். குடும்பம் குடும்பமாக மக்கள் கடற்கரைகளில் குவிந்து விதம் விதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
மால்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஹோட்டல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதேபோல மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் புத்தாண்டை மக்கள் உற்சாமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல கோவில்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி மகிழ்ந்தனர். சர்ச்சுகளிலும் சிறப்பு பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டு மக்கள் புது வருடம் சிறப்பாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
{{comments.comment}}