செங்கல்பட்டு: ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே, பிறந்து 3 மணிநேரமே ஆன பெண் குழந்தை சாலையோரம் வீசப்பட்ட பரிதாபம் நடந்துள்ளது.
ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் பெண் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அவ்வழியே சென்ற திருநங்கை ஒருவர் அந்த குழந்தையை பார்த்துள்ளார். உடலில் துணி எதுவும் இல்லாமல் எறும்புகள் சூழ்ந்த நிலையில் குழந்தை கிடந்துள்ளது. பதறிப் போன திருநங்கை குழந்தையை கையில் தூக்கி வைத்துக் கொண்டு, 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த திருநங்கை கூறுகையில், இது எல்லாம் நியாயமா, ரோட்டுல வீசி இருக்காங்க. இங்க எல்லாம் ஆடு குட்டி போட்டாலே நாய் தூக்கிட்டு போயிடும். இந்த பச்ச புள்ள என்னங்க பண்ணுச்சு. பாவம் இன்னக்கி காலையில தான் பிறந்திருக்கு. மாவு கூட கழுவல தலை எல்லாம் மாவு. இது எல்லாம் நியாயமே இல்ல. இந்த புள்ள என்ன பாவம் பண்ணிச்சு. பொம்பள புள்ள வேற.. இதுக்கு ஏதாவது நல்லது செய்ங்க என்று கூறி 108 ஆம்புலன்சில் வந்தவரிடம் கொடுத்து அனுப்பினார்.
அந்த குழந்தைககு 108 ஆம்புலன்சில் முதல் உதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அறிந்து வந்த அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்படி இங்கே குழந்தை வந்தது, யாருடைய குழந்தை என்று பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!
அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
{{comments.comment}}